வணக்கம் வாசகர்களே! எங்களது முதல் இதழுக்கு நீங்கள் அளித்த ஆதரவு மழையில் மனமார நனைந்ததில் பெருமகிழ்ச்சி. தொடர்ந்து எங்கள் இதழுக்கு ஆதரவு அளித்து புதியதோர் அனுபவத்தைப் பெற்றிட வாருங்கள்.
கடந்த ஜனவரி 27-ஆம் நாள் புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் பள்ளியில் நடந்த ஓர் எளிய விழாவில் தொடங்கப்பட்டது நமது ‘விரல்மொழியர்’ மின்னிதழ். அறிவு தாகம் நிறைந்த பல பார்வையற்றவர்களின் சங்கமமான இணையத் தென்றல் மின் மடல் குழுவின் நெறியாளர் திரு. மு. பார்த்திபன் அவர்கள் இதழைத் தொடங்கிவைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி. விசித்திரா அவர்களின் தலைமையில் நடந்த லூயி பிரெயில் தின விழாவின் ஒரு பகுதியாக இந்நிகழ்வு நடந்தேறியது. விரல்மொழியரின் வருங்காலப் படைப்பாளிகளான அப்பள்ளிக் குழந்தைகளும், நாங்களும் இணைந்து மகிழ்ந்திருந்த பெருமி்தத் தருணம் அது.
அன்று முதல் இன்று வரை தினந்தினம் எங்களுக்கு நீங்கள் உற்சாகம் அளித்துவருகிறீர்கள். எங்கள் இதழ் குறித்த செய்திகளை வெளியிட்ட பிற ஊடக நண்பர்களுக்கும், எங்கள் நலன் விரும்பிகளுக்கும் கோடானகோடி நன்றிகள்.
இதே மகிழ்ச்சியோடு, பிப்ரவரி மாத இதழைப் படிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். பிப்ரவரி என்றாலே நம் நினைவில் நிழலாடுவது காதலர் தினம்தான். இந்த மாத இதழ் காதலர் தின சிறப்பிதழாக மிளிர்ந்து உங்களைக் கிரங்கடிக்க இருக்கிறது.
பார்வையற்றவர்களின் காதல் தொடர்பான விதவிதமான படைப்புகள் இந்த இதழில் இடம்பெற்றுளன. அவை தவிர பட்ஜெட் 2018, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி ஆகிய நடப்பு நிகழ்வுகள் தொடர்பான கட்டுரைகளும் இதழில் இடம்பெற்றுள்ளன. படித்து மகிழுங்கள்; கருத்துகளைத் தெரிவியுங்கள்.
தலித்தியம், பெண்ணியம் முதலியவை போல பார்வையற்றோரின் வாழ்க்கை முறை, மன உணர்வுகள், சாதனைகள், பொது வெளி குறித்த அவர்களது கருத்துகள் உள்ளிட்டவற்றைப் பதிவு செய்யும் படைப்புகளைத் தாங்கி வரும் ஒரு புது இயத்தை உருவாக்கும் முயற்சியில் விரல்மொழியரோடு விரல் கோர்த்திட வாரீர்!
உலகெங்கிலும் உள்ள காதலர்கள் அனைவருக்கும் விரல்மொழியரின் காதலர் தின வாழ்த்துக்கள்!