விரல்மொழியர்
பார்வையற்றவர்களால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ் ‘விரல்மொழியர்’. பார்வையற்றவர்களின் படைப்புத் திறனை வெளிக்கொணர, அவர்களின் சிக்கல்களை விவாதிக்க களம் அமைத்துத் தரும் மாத இதழ்.
பார்வையற்றவர்கள் தங்கள் சிக்கல்கள், பெருமிதத் தருணங்கள், சவால்கள், தங்களுக்கான தொழில்நுட்பம், விளையாட்டு முதலியவை பற்றி இங்கு எழுதுவர். மேலும் அரசியல், சினிமா, விளையாட்டு, இலக்கியம் முதலியவை குறித்த பார்வையற்றவர்களின் பார்வையும் இங்கு படைப்புகளாகத் தரப்படும். பார்வையற்றோர் குறித்துப் பேசும் பார்வையுள்ளோரின் படைப்புகளும் இவ்விதழில் இடம்பெறும். இவ்விதழ் வரி வடிவில் மட்டுமின்றி, வாசகர்களின் வசதிக்காக ஒலி வடிவிலும் வெளிவருகிறது.
எந்த நிறுவனமும் சாராமல் ரா. பாலகணேசன், ப. சரவணமணிகண்டன், பொன். சக்திவேல், பொன். குமரவேல், ஜோ. யோகேஷ், ரா. சரவணன் ஆகிய 6 பார்வையற்ற பட்டதாரி இளைஞர்கள் மேற்கொண்டிருக்கும் அரிய முயற்சி இது.
பார்வையற்றவர்களின் படைப்புத் திறனை, அவர்களது சாதனைகளைப் பார்வையுள்ளோர்க்கும் எடுத்துரைக்க, பொது தளத்தில் பதிவு செய்ய மேற்கொள்ளப்பட்டிருக்கும் இம்முயற்சிக்கு உங்கள் ஆதரவை நாடுகிறோம், என்றென்றும்.