பார்வையற்றோருக்காகப் பாடுபடும் சங்கங்கள் பல. அவற்றுள் மாறுபட்ட சங்கம் இந்த ‘பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கம்’. தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை பணியாற்றக்கூடிய பார்வையற்ற ஆசிரியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் கடந்த 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பானது, இன்றளவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
தொடக்கம் மற்றும் நிறுவன உறுப்பினர்கள்
526/2005 என்ற பதிவு எண்ணில், ‘பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கம்’ (Blind Teachers Association - BTA) என்ற பெயரில் இச்சங்கம் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனத் தலைவராக மறைந்த திரு. N. மனோகரன் அவர்களும், துணைத் தலைவராகத் திரு. ளு. இராஜேந்திரன் அவர்களும், பொதுச்செயலாளராகப் பேராசிரியர் திரு. ஆ. பழனி அவர்களும், இணைச்செயலாளராக திரு. ஆ. இராஜேந்திரன் அவர்களும், பொருளாளராக பேராசிரியர் திரு. யு. விஜயகுமார் அவர்களும் என 5 அலுவலகத் தாங்கர்கள், 10 செயற்குழு உறுப்பினர்கள் என 15 நிறுவன உறுப்பினர்களைக் கொண்டு இச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இன்றைய தேதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இச்சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.
தலைமை மற்றும் கிளைகள்
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இச்சங்கம், நிர்வாக வசதிக்காகவும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பார்வையற்ற ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் பொருட்டும் பல்வேறு கிளைகளைக் கொண்டுள்ளது. தற்போது மதுரை, சேலம், விழுப்புரம், வேலூர், தருமபுரி, திருச்சி, தஞ்சை, சென்னை ஆகிய கிளைச் சங்கங்கள் இச்சங்கத்தின்கீழ் செயல்பட்டு வருகின்றன. தற்போதைய மாநிலத் தலைவராகத் திரு. ளு. இராஜேந்திரன் அவர்கள் செயல்பட்டு வருகிறார்.
சங்கத்தின் பணிகள்
பார்வையற்ற ஆசிரியர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இச்சங்கம் முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் சாதனைகளாகக் கீழ்க்கண்டவற்றைச் சொல்லலாம்.
பார்வையற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாமல், பார்வையற்ற மாணவர்கள் நலனிலும் இச்சங்கம் அக்கறை கொண்டுள்ளது. அவர்கள் தொடர்பான கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்துவது, அவர்களுக்கான போட்டிகளை அவ்வப்போது நடத்துவது போன்றவை மட்டுமின்றி, அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்குப் பரிசுகளும் இச்சங்கத்தால் வழங்கப்படுகின்றன.
ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பில் உறுப்பினராக இணைந்திருக்கும் இச்சங்கம், போராட்டக் களத்திலும் தன்னை நிலைநிறுத்தி வருகிறது. பார்வையற்ற ஆசிரியர்களுக்குப் பணியிடங்களிலும், நிர்வாக ரீதியாகவும் ஏற்படும் பல சிக்கல்களையும் இச்சங்கம் தீர்த்துவைத்துள்ளது.
உறுப்பினராக
நிரந்தர ஆசிரியர் பணியில் இருக்கும் பார்வையற்றவரா நீங்கள்? இச்சங்கத்தில் நீங்கள் உறுப்பினராக விரும்புகிறீர்களா? மேலே கூறப்பட்ட கிளைகளில், உங்களுக்கு அருகிலிருக்கும் கிளைத் தலைமையை அணுகி நீங்கள் இச்சங்கத்தின் உறுப்பினராகலாம்.
தொடர்புக்கு: 8098944620 (வெங்கடேசன், சங்கப் பொதுச்செயலர்)
மின்னஞ்சல்: [email protected]
--
(கட்டுரையாளர் பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் மேற்கு மண்டலக் கிளைத் தலைவர். முடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முதுநிலை தமிழாசிரியர்).
தொடர்புக்கு: 9994080153

- வருமான வரிப் படிவம் தாக்கல் செய்யும்போது மருத்துவக் குழுமச் சான்றிற்குப் (Medical Board Certificate) பதிலாக, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை மருத்துவச் சான்றிதழாக ஏற்றுக்கொள்ள இச்சங்கம் வழிவகை செய்துள்ளது.
- மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்படும் ஊர்திப் படியினைத் (Conveyance Allowance) துறைத்தலைவரின் அனுமதி பெற்று வாங்க வேண்டும் என்ற நிலையை மாற்றி, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே வழங்கலாம் என்ற அரசாணையை இச்சங்கம் பெற்றுத்தந்துள்ளது.
- நடைமுறையில் உள்ள 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, போக்குவரத்து ஊர்திப்படியினை ரூ. 1000-லிருந்து ரூ. 2500-ஆக உயர்த்தி வழங்க இச்சங்கம் நடவடிக்கை மேற்கொண்டது.
- இலவச பேருந்துப் பயண அட்டை இருந்தாலும், பார்வையற்ற அரசு ஊழியர்கள் போக்குவரத்து ஊர்திப்படி பெறலாம் என்ற அரசுக் கடிதத்தினை இச்சங்கம் கடந்த 2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் மூலம் உறுதிப்படுத்தியது.