நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் ஆசிரியர்கள். அடுத்த தலைமுறையின் அறிவுசார் வளர்ச்சிக்குக் காரணமாய்த் திகழவேண்டியவர்கள் இவர்கள். சுருக்கமாகச் சொன்னால், நாளைய தலைவர்களை வகுப்பறைகளில் வடிவமைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆசிரியர்கள்!
கவிதை, கதை, நாவல், கட்டுரை ஆகியவற்றை எழுதும் எழுத்தாளர்களுக்கும் இத்தகைய பொறுப்பு இருப்பதாலோ என்னவோ, தமிழ்ச் சூழலில் அவர்களும் ‘ஆசிரியர்கள்’ என்ற சொல்லால் அழைக்கப்படுகிறார்கள். நோக்கத்தில் பிறழாமல், அல்லவை நீக்கி, தேவையானவற்றை இதழில் கவினுற இடம்பெறச் செய்யும் இதழின் தலைமைப் பொறுப்பாளர்களையும் ‘ஆசிரியர்கள்’ என்கிறது தமிழ்ச் சமூகம். ஆக, தமிழ்ச் சமூகத்தில் ஆசிரியர்களின் பங்கு மிக நீண்டது; ஆழமானதும் கூட. வரலாற்றை நினைவூட்டல், அறிவியல் சிந்தனைகளை வளர்த்தல், துறை சார்ந்து ஒழுங்குபடுத்துதல் என்று அடுத்த தலைமுறைக்கு அறிவைக் கடத்திச் செல்லும் அத்தனை ஆசிரியர்களுக்கும் விரல்மொழியரின் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
இன்றைய காலகட்டத்தில் கற்பித்தல் துணைக் கருவியாகக் கருதப்படும் கணினிகள், நாளை முதன்மைக் கருவியாகலாம்; ஆசிரியர்கள் துணைக் கருவியாகிவிடும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே தொழில்நுட்ப அறிவு மிகுந்திருப்பவர்களே வருங்காலத்தை மன உறுதியோடு எதிர்கொள்ள முடியும். தமிழகத்தில் உள்ள பார்வையற்ற ஆசிரியர்கள் தங்களை நிரூபிக்கவும், பிறரோடு சமமாகப் பொது வாழ்வில் பங்கேற்கவும் தொழில்நுட்பத் தேர்ச்சி பெறுவது அவசியம்.
வாசகர்களே! இந்த மாத இதழ் ஆசிரியர் தின சிறப்பிதழாக மிளிரவிருக்கிறது. படித்துப் பயன் பெறுவீர்.
நம் இதழை இனி நீங்கள் வரி வடிவில் மட்டுமின்றி, ஒலி வடிவிலும் கேட்டுப் பயன்பெற முடியும். எங்களது யூடியூப் பக்கத்தில் இணைந்து (https://www.youtube.com/channel/UC5T7XluFXmi1J0sCWZG7Tbg) கேட்டுக் கருத்துகளைத் தாருங்கள்.
“உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு”