“மாற்றுத்திறனாளிகளும் ஒலிம்பிக் போட்டிகளில் அசத்துகிறார்களே” என மக்கள் வியந்து பார்க்குமளவிற்கு நம்மவர்கள் ஜொலிக்கத் தொடங்கியிருக்கின்றனர். சிறந்த வீரர்களை அடையாளம் காணும் நோக்கில் பல போட்டிகளும், விளையாட்டு முகாம்களும் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு அங்கமாக, பாரா ஒலிம்பிக் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற, ‘இந்தியப் பார்வையற்றோர் கால்பந்து சம்மேளனம்’ பெங்களூரில் 31/8/2018 தொடங்கி 2/9/2018 வரை, தென் மற்றும் கிழக்கு மண்டலங்களுக்கான போட்டியை நடத்தியது. குஜராத், மும்பை, கேரளா, பெங்களூரு, சென்னை, மதுரை ஆகிய 6 அணிகள் மற்றும் இந்த 6 அணிகளிலும் உபரியாக இருந்த பதிலி வீரர்களைக் கொண்டு, ‘புதியவர்கள் கூட்டமைப்பு 1’, ‘புதியவர்கள் கூட்டமைப்பு 2’ என இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.
பார்வையற்றோருக்கான கால்பந்தாட்டத்தை 60 நாடுகள் ஆடிவருகின்றன. அதில், சர்வதேச தரப்படுத்தலில் இந்தியா 29-ஆம் இடம் வகிக்கிறது. குறைப்பார்வையுடையோர், முழுப்பார்வையற்றோர் என இருவகையாகப் பார்வையற்றோர் பிரிக்கப்படுகின்றனர். அதில் முழுப்பார்வையற்றோருக்கான கால்பந்தாட்டமே உலகம் முழுவதும் ஆடப்பட்டு வருகிறது. சாதாரண கால்பந்தாட்டத்தின் சகல விதிகளும் பின்பற்றப்பட்டாலும், அதில் பார்வையற்றோருக்கு ஏற்றவாறு சில விதிகள் உட்புகுத்தப்பட்டு பார்வையற்றோருக்கான கால்பந்தாட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிகளில் பந்துகள் அதிகம் மேலெழும்பாது; அதற்குக் காரணம், இப்போட்டிகளுக்காகவே பயன்படுத்தப்படும் ஃபைபர் பந்துகள். அவை, 540 முதல் 560 கிராம் எடை கொண்டதாக இருக்கும். பந்தைச் சுற்றி ஒலி எழுப்பும் பாசிமணிகள் உட்புறமாக இணைக்கப்பட்டிருக்கும். ஓரணியில் ஐவர் ஆடுவர். அதில், 4 முழுப்பார்வையற்றவர்கள் மற்றும் ஒரு கோல் காப்பாளர்; அவர் பார்வையுடையவராகவோ, குறைப்பார்வையுடையவராகவோ இருக்கலாம்.
மைதானத்தின் பரப்பளவானது, 20 மீ. அகலமும் 40 மீ. நீளமும் உடையதாய் இருக்கும். கோல் கம்பமானது 4 மீ. அகலமும் 2.5 மீ உயரமும் கொண்டதாக இருக்கும். களிமண் தரை, புல் தரை அல்லது செயற்கை இலை மைதானங்களிலேயே இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. மைதானத்தின் தடுப்புச் சுவர்கள் தெர்மோகோல் உள்ளிட்டப் பொருட்களை கொண்டு, மோதினாலும் காயம் ஏற்படாத வகையில் அமைக்கப்படும். உடல் பாதுகாப்பிற்கு இப்போட்டிகளில் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதுவே, பார்வையற்றோர் கால்பந்தாட்டம் குறித்த சிறு அறிமுகம். இனி பெங்களூரில் என்ன நடந்தது எனப் பார்ப்போம்.
இப்போட்டிகள் யஷ்வந்த்பூரில் உள்ள செயற்கை இலை மைதானத்தில் நடத்தப்பட்டன. இத்தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி கேரள அணி கோப்பையைத் தட்டிச்சென்றது. அதிக கோல்கள் அடித்தமைக்கான தங்கப்பாதுகை விருதை குஜராத் அணியின் நீரோ (12 கோல்கள்) பெற்றார். தொடர் நாயகன் விருதை, கேரள அணியின் வெற்றிகளுக்குக் காரணமான ஃபர்கான் பெற்றார்; இத்தொடரில் 11 கோல்களை இவர் அடித்தார். சிறந்த கோல் காப்பாளர் விருதை, அதே அணியைச் சேர்ந்த அணுகிரஹா தட்டிச்சென்றார். இத்தொடரில் சிறப்பாக ஆடியவர்கள் இந்திய அணிக்கான பயிற்சி முகாமிற்குத் தெரிவுசெய்யப்பட்டனர். அம்முகாம், செப்டம்பர் 2 முதல் 17-ஆம் தேதி வரை கொச்சியில் நடத்தப்பட்டது. இது ஆஸ்திரேலியா அணியுடன் மோதுவதற்கான பயிற்சி முகாமாக அமைக்கப்பட்டது. அதில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்கள் இந்திய அணிக்குத் தெரிவுசெய்யப்பட்டனர்.
செப்டம்பர் 19-ஆம் தேதியிலிருந்து 21 வரை இந்திய ஆஸ்திரேலியா அணிகள் 3 போட்டிகள் கொண்ட தொடரில் மோதின. இத்தொடர் கொச்சியில் நடைபெற்றது. இதில் 2 போட்டிகளில் வென்று இந்தியா வாகை சூடியது.
பெங்களூரு தொடரில் பங்கேற்ற இரு தமிழக அணிகளின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்ற வினா உங்களுக்குள் எழும். சென்னை ‘இலயோலா’ அணி, கேப்ரியல் என்ற மணிப்பூரைச் சேர்ந்த இந்திய அணி வீரரின் தலைமையில் களம் கண்டது. அணிக்காக 8 கோல்களை அடித்து அவர் அரையிறுதி வரை அணியை அழைத்துச்சென்றார். அவர்கள் பெங்களூரு அணியிடம் வெற்றிவாய்ப்பை இழந்தனர். மதுரையைச் சேர்ந்த ‘தமிழக பார்வையற்றோர் விளையாட்டு சங்க’ அணியும் தங்களாலான திறமைகளை வெளிப்படுத்தினர். இவ்வணியின் கோல் காப்பாளர் வசந்தின் திறமையைப் பலரும் பாராட்டினர்.
தமிழக வீரர்கள் சோபிக்காமைக்கான காரணத்தைத் தேடும் நாம், தமிழகத்தில் நாம் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பல சிறப்புப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களே இல்லை. இங்கே திறமையான வீரர்கள் இருக்கின்றனர்; அவர்களுக்கு வழிகாட்டத்தான் ஆட்களில்லை. இத்தொடரில் பங்கேற்ற ஒவ்வொரு அணியிலும் 3-க்கும் குறையாத சர்வதேச வீரர்கள் இருந்தனர். ஆனால், தமிழக அணியிலோ 15 நாட்களுக்கு முன்புதான் கால்பந்து விளையாடத் தொடங்கியவர்களும், போட்டி தொடங்குவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்புதான் கால்பந்தையே பார்த்தவர்களும் இருந்தனர்.
கொச்சியில் முழு நேரமும் கால்பந்தாட்ட பயிற்சியளிக்கும் ஒரு நிறுவனம் இருக்கிறது. அதில் பயிற்சி எடுத்த பலரும் சர்வதேச அளவில் ஆடிவருகின்றனர். பரிசுத்தொகையும் கணிசமான அளவிற்கு இப்போது கிடைக்கின்றது; அது அவர்களின் பொருளாதாரத்திற்கும் உதவுகின்றது. ஆனால், தமிழகத்தில் இவ்விடையம் பற்றி யாருக்குமே தெரியாது என்பது பேரவலம்தான்!
குறுகிய நேரத்தில் ஆட்டத்தைக் கற்றுக்கொண்டு, முழு நேரம் பயிற்சி பெற்ற வீரர்களுக்கு சவாலளிக்கும் வகையில் நம்மவர்கள் ஆடினார்கள் என்பதை அங்குள்ள வீரர்களே ஒப்புக்கொண்டனர். சர்வதேச வீரர்களின் ஆட்டத்தை நேரே காணும்போது, தமிழக வீரர்கள் பலர் மனதில் அதேபோன்று சிறப்பாக விளையாட வேண்டுமென்ற எண்ணம் எழுந்திருக்கும்; சிலர் மனதிலாவது அது விதையாக விழுந்திருக்கும். கோப்பையைப் பெறாவிட்டாலும், அவர்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் எதிர்கால வெற்றிகளுக்கு வழிகாட்டும்!
--
தொடர்புக்கு: [email protected]