‘கல்வி கொடுத்தோர், கண் கொடுத்தோர்’ என்பது பெரியோர் வாக்கு. தங்கத் தமிழ்நாட்டில், வங்கக் கடலோரத்தில், கண்கவர் பொலிவுடன் அமைந்திருக்கிறது கடலூர் நகரம். கப்பல் துறைமுகம், கேப்பர் மலை, புனித டேவிட் கோட்டை, கெடிலம் மற்றும் பெண்ணை ஆறுகள், சிப்காட் தொழில் கூடங்கள் ஆகியவை கடலூர் நகருக்கு சிறப்புத் தருவனவாகும். கடலூர் நகருக்கு மேலும் சிறப்பு யாதெனில், இங்கு அரசு பார்வையற்றோர் துவக்கப் பள்ளி அமைந்திருப்பதாகும்.
1968-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சென்னை, பூவிருந்தவல்லி அரசு பார்வையற்றோர் பள்ளியிலிருந்து பன்னிரண்டு கண் பார்வை குறைபாடுடைய மாணவ, மாணவியர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு கடலூர் வந்தனர். இவர்களில் ஒருவர் பெண்; தலைமை ஆசிரியை. மற்றொருவர் ஆண்; கைத்தொழில் ஆசிரியர். புது கடலூர் நகரில், கெடிலம் ஆற்றங்கரையில், நெல்லிக்குப்பம் செல்லும் சாலையில், செம்மண்டலம் என்னும் பகுதியில் மேற்கூறப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சிறப்புப் பள்ளி உதயமானது.
இப்பள்ளியை தோற்றுவித்த இரு ஆசிரியர்களுமே மறைந்துவிட்டனர். தலைமை ஆசிரியை லில்லி ஞானசுந்தரம் அவர்கள் மணம் முடிக்காமல் தன்னை கல்விச் சேவையில் முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். அவரை மாணவர்கள் அன்பாக, ‘டீச்சர் அக்கா’ என்றும், ‘அக்கா” என்றும் அழைத்தனர். அவர் மாணவர்களுக்கு கல்வியோடு கீழ்ப்படிதல், அடக்கம், ஒழுக்கம் ஆகியவற்றையும் ஊட்டி வளர்த்தார். ‘கீழ்ப்படிதலே ஞானத்தின் ஆரம்பம்” என்பது அவர் அடிக்கடி மாணவர்களுக்குக் கூறிய தாரக மந்திரம்.
பள்ளி தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே, முதன்முதலாக கண் பார்வை குறைபாடுடைய திரு. கோ. அமல்ராஜ் என்ற பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டார். இவர் பூவிருந்தவல்லி அரசு பார்வையற்றோருக்கான மேல்நிலைப்பள்ளியின் துணை முதல்வர் பதவி வரை உயர்ந்து, இப்போது ஓய்வு பெற்றுள்ளார். மேலும், இப்பள்ளியிலேயே கல்வி பயின்று இசைத் துறையில் பட்டம் பெற்ற திரு. ப. சத்தியநாராயணன் தற்போது இசை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.
இப்போது, இப்பள்ளி கல்விச் சேவையில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இப்பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்று சென்ற மாணவர்கள் ஆசிரியர்களாக, மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகளாக, அலுவலர்களாக, தொழில்நுட்ப வல்லுனர்களாக, சுயதொழில் நிபுணர்களாக என பல பணிகளில் சிறப்பாக செயலாற்றி வருவது இப்பள்ளிக்கு மகுடம் சூட்டுவதாக அமைந்துள்ளது.
கடலூர் அரசு பார்வையற்றோர் துவக்கப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொன்விழாவினைச் சிறப்பாகக் கொண்டாட ஒரு குழு அமைத்து செயல் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர். பொன்விழா கொண்டாட, தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் ஆணையர் திரு. அருண் ராய், இ.ஆ.ப. அவர்கள் சிறப்பு ஆணையின் மூலம் அனுமதியும் வழங்கி இருக்கிறார்கள்.
விழாவின் சிறப்பாக, பார்வையற்றவர்களின் ஆற்றலை நிரூபிக்க ஒரு கண்காட்சியும், இங்கு பணியாற்றிய ஆசிரியர்களை கௌரவிக்கவும், பொன்விழா மலர் வெளியிடவும், இப்பள்ளியில் தற்போது பயிலும் மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தி அவர்களின் திறமையை வெளிக்கொணரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்விழா சிறப்பாக நடைபெற நண்பர்கள் அனைவரின் ஒத்துழைப்பும், உதவியும் அவசியமாகிறது. யார் வேண்டுமானாலும் தாராளமாக நிதி உதவி அளிக்கலாம். மேலும், கட்டணத்துடன் கூடிய விளம்பரங்களை தந்து உதவலாம். உங்கள் படைப்புகளையும் பொன்விழா மலருக்கு அனுப்பி வைக்கலாம். மேலும், தகவல் பெற விரும்புபவர்கள் பொன்விழாக் குழுவின் உறுப்பினர்களான மா. கோபாலகிருஷ்ணன் (தலைவர்) 9444140591, க. வேலு (செயலாளர்) 9965178656, மை. பெர்னல் ராபர்ட் (பொருளாளர்) 9443478906 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு, மின்னஞ்சல் முகவரி: [email protected]
‘வண்டு தொடுவது மலர்;
கன்று தொடுவது பசு;
பார்வையற்றோர் விரல் தொடுவது பிரெயில்;
பள்ளி பழைய மாணவர்களின் குரல் தொடுவது உங்கள் இதயத்தை!’
கடலூர் அரசு பார்வையற்றோர் துவக்கப் பள்ளியால் பயன் பெற்ற அத்தனை விரல் விழியர்களையும் அன்புடன் அழைக்கிறோம். வாரீர், பொன்விழாவினைச் சிறப்பித்துத் தாரீர்!
--
கட்டுரையாளர் சென்னை, பூவிருந்தவல்லி தேசிய பார்வையற்றோர் நிலையம் (NIVH) மண்டல மையத்தின் தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர்.
தொடர்புக்கு: [email protected]