வரும் கல்வி ஆண்டு முதல் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான பாடங்கள் மாற்றப்பட உள்ளன. இதற்கான புதிய பாடப் புத்தகங்களை மே 4 அன்று தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டார். வெளியிடப்பட்ட புத்தகங்களுக்கு உரை (Notes) தயாரிக்கும் பணியும் பல தனியார் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் கிடைக்கின்றன. புதிய பாடங்கள் எப்படி இருக்கப்போகிறது என ஆசிரியர்களும், மாணவர்களும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
அதே நேரம், பார்வையற்ற ஆசிரியர்களும், பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளி ஆசிரியர்களும் பதற்றத்தோடுதான் கோடை விடுமுறையைக் கழிக்கின்றனர். அவர்கள் தங்களுக்குள் சந்தித்துக்கொள்ளும் போதெல்லாம், ‘புதிய பாடங்களுக்கான பிரெயில் புத்தகங்கள் எப்போது கிடைக்கும்?’ என்ற கேள்வியைக் கேட்டுவைக்கின்றனர்.
பல ஆண்டுகாலப் பிரச்சனை
பார்வையற்றோர் படிக்கத் தொடங்கிய காலம் தொட்டே இருக்கும் பிரச்சனை இது. ஒவ்வொரு முறை பாடங்கள் மாற்றப்படும்போதும் இந்தப் பிரச்சனை தலை தூக்குவதைத் தடுக்க முடியவில்லை.
2010-இல் சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்கள் பிரெயிலில் கிடைக்கத் தாமதமானது குறித்து பல ஊடகங்கள் எழுதின; பேசின. இதனால் இப்பிரச்சனை பரவலான கவனம் பெற்றது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கும் மத்திய அரசின் நிறுவனமான ‘N.I.V.H.’ பிரெயில் அச்சகத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டதாக அறிய முடிகிறது. அப்படி இருந்தும், 2018 புதிய பாடத்திட்ட உருவாக்கத்தில் இப்புரிந்துணர்வு அவ்வளவாகக் கை கொடுக்கவில்லை என்பதுதான் வருந்தத்தக்க உண்மை.
உறுதி கொடுத்த தமிழக அரசு
இப்பிரச்சனை குறித்து பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கம், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம், வாசிப்புக் குறைபாடுடையோருக்கான இணைய தளமான ‘Bookshare’ முதலிய அமைப்புகள் தமிழக அரசிடம் முன்கூட்டியே வலியுறுத்தியுள்ளன. அதன் விளைவாக, தமிழக அரசு புதிய பாடப் புத்தகங்களைப் பார்வையற்றோருக்கு ஏற்ற வகையில் பிரெயிலிலும், பெரிய அளவிலான எழுத்துகளிலும், ஒலி வடிவிலும், இணையத்தில் ஒருங்குறி (Unicode) வடிவிலும் தருவதாக உறுதியளித்துள்ளது. ஆயினும் கட்டுரை எழுதப்படும் இந்த நாள் வரை (11.05.2018) மேற்கண்ட எந்த உறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
இவற்றில், ஒலி வடிவில் (Audio) வழங்குவது கூடுதல் உழைப்பைக் கோரும். ஆனால், ஒருங்குறி வடிவிலான கோப்பினை இணையத்தில் தரவேற்றுவதற்கு அல்லது சில அமைப்புகளுக்கு வழங்குவதற்கு இத்தனை நாட்கள் தேவையில்லை.
பிரெயில் புத்தகங்கள் எப்போது கிடைக்கும்?
தமிழ்நாடு பாடநூல் கழகம் ஒருங்குறி வடிவக் கோப்பினை வெளியிட்ட உடனேயே பிரெயில் புத்தகங்களுக்கான பணிகளைத் தொடங்கிவிடலாம். ஒருங்குறி வடிவக் கோப்பினை ‘The Duxbury Braille Translator - DBT’ என்ற மென்பொருளின் மூலம் பிரெயிலில் மாற்றிவிடலாம்.
பிறகென்ன? இந்த மாத இறுதியில் அரசு ஒருங்குறி வடிவக் கோப்பினைத் தந்தாலே விரைவாக நாம் பிரெயில் புத்தகங்களைப் பெற்றுவிடலாமே என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை! ஒரு புத்தகத்தை பிரெயிலில் மாற்றும்போது சில நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.
பிரெயில் புத்தகங்களை வடிவமைப்பதில் உள்ள சிக்கல்கள்
பிரெயில் புத்தகங்களை வடிவமைப்பதில் என்னென்ன சிக்கல்கள் உள்ளன என்பதை புதிய 11-ஆம் வகுப்பு தமிழ் பாடநூலை அடிப்படையாகக் கொண்டு விளக்க முயல்கிறேன். 11-ஆம் வகுப்புக்கான புதிய பாடநூல் எப்படியோ வாட்ஸ்அப்களில் ‘PDF’ வடிவில் வெளியாகிவிட்டது. எனவே, இந்நூலை அடிப்படையாகக் கொண்டு சிக்கல்களை ஆராய்வோம்.
பிரெயில் வடிவமைப்பில் குறைந்த சிக்கல்களை உடையவை மொழிப் பாடங்கள்தான். அறிவியல், கணிதப் பாடங்களில் இடம்பெறும் குறியீடுகளுக்கு பிரெயில் வடிவம் கொடுப்பதே அதிக நேரத்தை விழுங்கிவிடும்.
என்னைப் பொறுத்தவரை 11-ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் மட்டுமே குறைந்தது 7 பிரெயில் தொகுதிகளாக வெளிவர வாய்ப்பிருக்கிறது. இந்த அடிப்படையில், 1-ஆம் வகுப்பிற்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல்; 6, 9-ஆம் வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல்; 11-ஆம் வகுப்பிற்கான தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், கணக்குப் பதிவியல், சிறப்புத் தமிழ், Advance English, அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் பிரெயிலில் தயாரிக்கப்பட்டாகவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மிகச் சிறுபான்மையினருக்கு இவற்றின் ஆங்கில வடிவங்களும் தேவைப்படலாம்.
பிரெயில் அச்சகங்களுக்கு இந்த ஆ்ண்டு முழுமைக்குமே இந்தப் பணி இழுத்துவிடும். ஆயிரக்கணக்கான பார்வையற்ற மாணவர்களுக்கும், பார்வையற்ற ஆசிரியர்களுக்கும் எல்லாப் புத்தகங்களும் சென்று சேர இந்த ஆண்டு இறுதி ஆகிவிடலாம் என்பது எனது கணிப்பு. ஒரு வேளை அதற்கு முன்பே இலக்கு நிறைவேற்றப்பட்டால் மகிழ்ச்சி. ‘டக்ஸ்பரி’ மென்பொருளின் உதவியால் தரவேற்றுதல் (Data Entry) என்ற மிகப்பெரிய வேலைப் பளு இல்லை என்பதால்தான் இந்தக் கால வரையறை!
என்ன செய்திருக்க வேண்டும்?
தமிழ்நாடு பாடநூல் கழகம் புத்தகங்களைத் தயாரிக்கும்போதே பிரெயில் வல்லுனர் ஒருவரையும் ஆலோசனைக்கு வைத்திருக்கலாம். படங்கள் போன்ற சிக்கல்களைத் தீர்க்க அவற்றிற்கான விவரணைகளையோ, மாற்று வடிவங்களையோ உடனுக்குடன் தனி ஒருங்குறிக் கோப்பாக வைத்திருக்கலாம்.
தமிழ்நாடு அரசுக்கென தனி பிரெயில் அச்சகம் இல்லாதது வருந்தத்தக்கது. ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த பூவிருந்தவல்லி அச்சகத்தைப் புதுப்பித்துச் செயல்படுத்தியிருந்தால் இதையே முழுநேர வேலையாக ஒரு அச்சகம் பார்த்துக்கொண்டிருக்கும். தமிழகத்தில் உள்ள பிற பிரெயில் அச்சகங்கள் தனக்குள்ள பல வேலைகளில் ஒன்றாகத்தான் புதிய பாடப் புத்தகத் தயாரிப்பை மேற்கொள்ளும்.
‘N.I.V.H.’ போன்ற நமக்கான நிறுவனங்களும், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையும், முக்கியப் பல்கலைக்கழகங்களும் ஒருங்குறி வடிவக் கோப்புகளை மேற்கண்ட சிக்கல்கள் இல்லாமல் பிரெயிலில் மாற்றுவது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.
எப்படி இருந்தாலும், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் பாடப் புத்தகங்களை விரைவில் வழங்குவோம் என்ற தமிழக அரசின் உறுதிமொழியே பாராட்டிற்குரியதுதான். நம் செயல்பாட்டாளர்களுக்கு இதுவே ஒரு மைல் கல் நிகழ்வு என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. முன்பைவிட ஒரு படி மேலேறியிருக்கிறோம் என்பதுதான் உண்மை. இருந்த போதிலும், ஐ.நா.-வின் ‘UNCRPD’-யில் இந்தியா கையெழுத்திட்ட பிறகும், ‘மாற்றுத்திறனாளிகள் நல உரிமைச் சட்டம் 2016’ நடைமுறைக்கு வந்த பிறகும் இந்நிலை நீடிப்பது கவலை அளிப்பதாகவே உள்ளது.
சமூக நீதிக்குப் பெயர்போன தமிழகத்திற்கு புதிய பாடப் புத்தகங்களைப் பார்வையற்றோருக்கு ஏற்ற வகையில் சரியான நேரத்தில் வழங்குவது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. அடுத்த ஆண்டு 2, 7, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கான பாடங்கள் மாற்றப்பட உள்ளன. அப்போதாவது அது நிறைவேறும் என நம்புவோம்.
--
தொடர்புக்கு: [email protected]

- ஒருங்குறி கோப்புகள் பிரெயிலில் மாற்றப்படும்போது பிரெயிலுக்கே உரிய சில குறியீடுகள் இல்லாமல்தான் வரும். அவற்றை நாம் இடமறிந்து இட வேண்டும்.
- இந்நூல் ஒரே பக்கத்தில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது. பிரெயிலில் இத்தகைய ஒழுங்கமைவைச் (Alignment) செய்ய இயலாது. எனவே பிரெயிலில் மாற்றப்பட்ட பிறகு இவற்றை இடமறிந்து மாற்றியமைக்க வேண்டும்.
- பாடநூலில் ‘மொழியாக்கம் தருக’ என்ற பகுதியில் ஆங்கிலத் தொடர்களும் பத்திகளும் தரப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துகளை பிரெயிலில் மாற்றும்படி ‘டக்ஸ்பரி’ மென்பொருளுக்குக் கட்டளையிட்டால், அது தமிழ் எழுத்துகளை மட்டும்தான் சரியாக மாற்றித் தரும். ஆங்கிலப் பத்திகள் தெளிவின்றியே பிரெயிலில் கிடைக்கும். இவற்றைச் சரிசெய்ய வேண்டும்.
- அட்டவணைகளை பிரெயிலில் மாற்றிய பிறகு மறு ஒழுங்கு செய்யவேண்டும்.
- புத்தகத்தில் உள்ள படங்களை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் விளக்க வேண்டியது அவசியம். படம் அடிப்படையிலான கேள்விகளும் நாம் சான்றுக்கு எடுத்துக்கொண்டிருக்கும் நூலில் இருக்கின்றன.
- நாம் சான்றுக்கு எடுத்துக்கொண்டிருக்கும் நூலில் குறுக்கெழுத்துப் புதிர்கள், மெய்ப்புத் திருத்தக் (Proofing) குறியீடுகள் முதலியவை இடம்பெற்றுள்ளன. அவற்றிற்கு ஈடாக/மாற்றாக பிரெயிலில் என்ன தருவது, எப்படித் தருவது என பிரெயில் வடிவமைப்பாளர்கள் சிந்திக்கவேண்டும்.