போராட்டம் என்பது மக்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தும் ஓர் வழிமுறையாகும். எப்போது மக்களின் நலன் அரசால் புறக்கணிக்கப்படுகிறதோ, மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி கொடுக்க மறுக்கிறதோ அப்போது மக்கள் போராட்டம் எனும் ஆயுதத்தைக் கையிலெடுக்கத் தள்ளப்படுகின்றனர்.
300 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டமும், 20-ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவின் ‘சார்’ அரசாங்கத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டமும் உலக வரலாற்றையே மாற்றி அமைத்தன. இந்தியாவில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தை எடுத்துக் கொண்டால், இந்தியர்களை பற்றிய ஆங்கிலேயர்களின் புரிதலே அதற்கு முக்கியக் காரணம். ‘இந்தியர்கள் பண்பாடு, கலாச்சாரம் அற்றவர்கள், அவர்களுக்கு ஆளும் தகுதியே இல்லை’ என்று வின்ஸ்டன் சர்ச்சில் கூறினார். இதனால்தான் மக்கள் கொதிப்படைந்து, அவரவர் விரும்பிய தலைவர்களின்கீழ் அணி திரண்டனர். அண்மைக் காலமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் கடுமையான போராட்டங்கள், தமிழகம் இந்தியப் பேரரசால் புறக்கணிக்கப்படுகிறது அல்லது தமிழக மக்கள் தமிழக அரசாலேயே புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை உணர்த்துகிறது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களில் ‘மெரினா புரட்சி’ என்று அழைக்கப்படும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தைத் தவிர, வேறு எந்தப் போராட்டங்களிலும் மக்கள் இன்னும் முழுமையாக வெற்றி பெறவில்லை எனலாம், அல்லது மக்களின் உணர்வுகளை மத்திய மாநில அரசுகள் மதிக்கவில்லை எனவும் சொல்லலாம். எடுத்துக்காட்டாக, அண்மையில் நடந்த பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தினரின் போராட்டத்தையும், அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் போராட்டத்தையும் எடுத்துக்கொள்வோம்.
அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் போராட்டம்
இப்போராட்டம் நியாயமானதா என்ற கேள்வி சாதாரண மக்கள் மனதில் எழுவதும், அல்லது அரசு தனது பொய் பிரச்சாரத்தால் அக்கேள்வி எழுமாறு செய்வதும் போராட்டம் மேற்கொள்பவர்கள்மீது பொதுமக்களுக்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் வஞ்சக எண்ணத்தையே வெளிப்படுத்துகிறது. அரசு ஊழியர்களின் முக்கியமான கோரிக்கை புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதாகும். இக்கோரிக்கையில் உள்ள நியாயத்தைச் சற்று ஆராய்வோம்.
எந்தவித தகுதிப்படுத்தலுக்கும் உள்ளாகாத ஒருவர் சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ ஆகிவிட்டால் அவர்களின் மாதச் சம்பளம் ரூபாய்.1,05,000-க்கும் அதிகம். அவர்கள் தனது 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்துவிட்டால், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் ஓய்வூதியம் 55,000 ரூபாய்.
25 ஆண்டுகள் பணி செய்து, பணி நிறைவு செய்யும் ஓர் ஆசிரியருக்கு வரும் ஓய்வூதியம் ரூபாய் 30,000. ஓர் சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ ஓர் ஆண்டில் நூறு நாட்கள் கூட கூட்டங்களில் கலந்துகொண்டு மக்கள் பிரச்சனைப் பற்றி பேசுவதில்லை. இது தவிர, சட்டமன்றத் தொகுதி நிதியாக ஆண்டுக்கு ஒரு தொகுதிக்கு 3 கோடி ரூபாயும், நாடாளுமன்றத் தொகுதி நிதியாக ஆண்டுக்கு 5 கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது. இவை சரியான முறையில் செலவிடப்பட்டிருந்தால் இன்று சாலைகள் இல்லாத நகரங்கள், மின் வசதி இல்லாத கிராமங்கள், கழிப்பறை இல்லாத கிராமங்கள் முதலிய சொற்றொடர்கள் இந்நேரம் ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டால்கூட அது எல்லாப் பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் முதன்மைச் செய்தியாக வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுபவித்து வரும் ஏராளமான சலுகைகள் மக்களுக்குத் தெரிவதில்லை. ரயில்களில் முதல் வகுப்பில் குளுகுளு வசதி செய்யப்பட்ட வரம்பற்ற இலவசப் பயணம், ஆண்டுக்கு 4 முறை விமானத்தில் முதல் வகுப்பில் வெளிநாட்டிற்கு இலவசப் பயணம், கட்டுப்பாடற்ற இலவச தொலைபேசி அழைப்புகள் என இன்னும் அவர்கள் அனுபவித்து வரும் சலுகைகள் ஏராளம். அண்மையில் நடந்து முடிந்த அல்லது நடக்காமலேயே முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்காக வீணடிக்கப்பட்ட மக்கள் பணம் 175 கோடி ரூபாய்!
மேலும், மக்கள் நலத் திட்டங்களுக்காக அரசு 20,000 கோடி ரூபாய் செலவிடுவதாக கூறுகிறது. எடுத்துக்காட்டாக, கல்வியை நவீனமயமாக்குகிறோம் என்ற பெயரில், மாணவ மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. எண்ணம் நல்ல எண்ணம்தான். எத்தனை மாணவர்கள் இதைக் கல்விக்காக பயன்படுத்துகின்றனர் என்ற கேள்வி நம் முன் எழுகிறது அல்லவா? பார்க்கக்கூடாத ஆபாசங்களையெல்லாம் பார்த்து இளம் தலைமுறை வழிமாறிச் சென்றுகொண்டிருக்கிறது. பெருகி வரும் பாலியல் வன்முறைகள் இதற்குச் சிறந்த சான்றாகும். ஆக, அரசின் இந்த வாதம் எந்த அளவுக்குச் சிறுபிள்ளைத்தனமான வாதம் என்பது விளங்கும்.
அடுத்த வாதம், அரசின் மொத்த வருவாயில் 75% அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக மட்டுமே கொடுக்கப்படுகிறது என்பதாகும். இங்கே சில புள்ளி விவரங்களை, அதுவும் அரசு கொடுத்த புள்ளி விவரங்களையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி, கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசு வங்கிகளில் கடன் பெற்று அவை அரசால் தள்ளுபடி செய்யபட்டது 5 லட்சம் கோடி ரூபாய். வாராக்கடன் என்ற வகையில் 7 லட்சம் ரூபாய். 7-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தும் வகையில் அரசுக்கு ஆன செலவை இவற்றோடு ஒப்பிட்டால், அரசின் பிரச்சாரம் எவ்வளவு பெரிய பொய் என்பது நமக்கு விளங்கும்.
பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கப் போராட்டம்
பார்வை மாற்றுத்திறனாளிகள் 2014-லிருந்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்; ஆனால், அரசின் அலட்சியம் காரணமாக தங்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியவில்லை. பார்வையற்றவர்கள் என்று கூட பாராமல் அவர்களை அடித்து, கைது செய்து, சுடுகாட்டில் இறக்கி விடுவது, அழைத்துப் பேச மறுப்பது மாதிரியான கொடூரமான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. ஜனநாயக நாட்டில் பார்வையற்றவர்களும் ஒரு அங்கமே. தேசிய நீரோட்டத்தில் அவர்களும் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், மாற்றுத்திறனாளிகள் நலன் பாதுகாக்கப்படுவதில் இந்தியா 76-ஆவது இடத்தில் உள்ளது. இதையே உச்சநீதிமன்றம், ‘மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 1995-ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு 19 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு என்ன செய்துள்ளது’ என்று 2014-ஆம் ஆண்டு மத்திய அரசை கேள்வி கேட்டது.
பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கம் முன்வைக்கும் கோரிக்கைகள் பணப்பயன் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல; அது நிறைவேற்ற முடியாததும் அல்ல. இருப்பினும் அரசு புறக்கணிக்கிறது. உதாரணமாக, இச்சங்கம் அண்மையில் நடத்திய தொடர் முழக்கப் போராட்டத்தில் முன்வைத்த முக்கியமான இரு கோரிக்கைகளை இங்கு எடுத்துக்கொள்ளலாம்.
முதல் கோரிக்கை, அரசாணை 667-ஐ ரத்து செய்து புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பது. அரசாணை 667 என்ன குறிப்பிடுகிறது? மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு ஊர்திப் படி வழங்குவது தொடர்பான அரசாணை அது. ‘நீண்ட மருத்துவ விடுப்பு, பணியிடை நீக்கம், ஈட்டிய விடுப்பு ஆகிய காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊர்திப் படி வழங்கப்படக்கூடாது’ என தெளிவாக இவ்வாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில அரசு நிறுவனங்கள் இதைத் தவறாகப் புரிந்துகொண்டு, அரசு விடுமுறை நாட்களிலும் ஊர்திப்படியைப் பிடித்தம் செய்கின்றன. ஆங்கிலத்தில் தெளிவாக, ‘During the Medical Leave (or) Suspension period except casual leave’ என்று குறிப்பிட்டிருந்தும், தமிழில் ‘விடுப்பு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தும் சில நிறுவனங்கள் இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாததால் ஏற்படும் குளறுபடிகளைக் களையும்படி அரசுக்கு இச்சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதைக்கூட அரசு நிறைவேற்றத் தயாராக இல்லை.
இரண்டாவது கோரிக்கை, பார்வையற்ற ஆசிரியர்களுக்குக் கணினிப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதாகும். இன்று பார்வையற்றவர்கள் கணினியையும், திறன் பேசிகளையும் பயன்படுத்தி வருகின்றனர். திரை வாசிப்பான் உதவியைக் கொண்டு இவர்களால் பயன்படுத்தப்படும் அதிநவீன சாதனங்களின் உதவியுடன் கற்பிக்கும் திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த பயிற்சியை அரசு வழங்கினால் பார்வையற்ற ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் மேலும் அதிகரிக்கும் அல்லவா? இத்தகைய கோரிக்கைகள் நியாயமானதாகவே இருந்தாலும் அரசு ஏன் இவற்றைப் புறக்கணிக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
பல நாடுகளில் மக்கள் போராட்டம் நடத்துவதே இல்லை. ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா, நார்வே போன்ற வளர்ந்த நாடுகளில் அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்துவதில்லை. அதற்குக் காரணம், மக்கள் நலனில் அந்த அரசுகள் காட்டிவரும் அக்கறைதான். இந்தியா மிக வேகமாக முன்னேறி வந்த நிலையில், சில ஆண்டுகளாக அரசு தனது கட்சியின் சித்தாந்தங்களை செயல்படுத்துவதிலும், ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து எவ்வாறு தப்புவது என்பதில் கவனம் செலுத்துவதிலும், பிறர்மீது தங்களுக்கு உள்ள வன்மத்தைத் தீர்த்துக்கொள்வதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருவதால் மக்கள் தங்கள் உணர்வுகளைப் போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர் என்றால் அது மிகையாகாது. பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கமும், ஜாக்டோ ஜியோ என்ற ஆசிரியர்கள் & அரசு ஊழியர்கள் கூட்டமைப்பும் அரசிடம் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என நம்புவோம்.
--
கட்டுரையாளர் சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர்.
தொடர்புக்கு: [email protected]