முதலாவதாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மரணமடைந்த அனைவருக்கும் விரல்மொழியரின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் காயமடைந்தவர்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
--
‘ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்’. இக்கூற்றைப் பல இடங்களில் கேட்டிருப்போம். இதுவே, சொற்களின் அரசியல், அச்சொற்கள் கட்டமைக்கும் உளவியல் குறித்துச் சுட்டும் மிகச்சிறந்த கூற்று.
சமூக ஊடகங்களில் தமிழன், விவசாயி போன்ற பதங்களும்; அரசியல் களங்களில் ஈழத்தமிழர் என்ற சொல்லும் உணர்வுப் பெருக்கால் மக்களின் கவனத்தை அச்சொற்களை கையாள்பவரின்பால் குவியச்செய்துவிடுகின்றன. அவ்வரிசையில் ‘மாற்றுத்திறனாளிகள்’, ‘பார்வையற்றவர்கள்’ போன்ற சொற்களும் சேரத் தொடங்கிவிட்டன. இச்சொற்களைப் பயன்படுத்தும் நபர்களுக்கு அவர்கள் விரும்பிய பயன் கிடைத்துவிடுகிறது. ஆனால், அச்சொற்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களோ அதனால் எந்நன்மையும் அடைவதில்லை.
இன்று, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் இசை நிகழ்ச்சிகளிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் கட்டாயம் ஒரு பார்வை மாற்றுத்திறனாளியைக் காணமுடிகிறது. இந்நிகழ்ச்சிகளில் பார்வையற்றோரைப் பேசவைத்து, பின்னணியில் சோக இசையை இழையோடவிட்டு, பார்வையாளர்களை அதிகரிக்க முயல்வதுதான் எங்களுக்குக் குமட்டலைத் தருகிறது. வானொலிகளிலோ, ‘அவர்கள் வெறும் பார்வை மாற்றுத்திறனாளிகள் அல்ல; இவ்வுலகயே மாற்றும் திறனாளிகள்’ என வகுப்பெடுக்கிறீர்கள்.
பார்வையற்றோர் நலன், மேம்பாடு, சம வாய்ப்பு, சம உரிமை என பக்கம் பக்கமாய் பேசியும், எழுதியும் வரும் ஊடகத் துறையில் பார்வையற்றோருக்கான பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறதே! அதைப் பற்றி எங்காவது வாய் திறந்திருக்கிறீர்களா?
கிளுகிளுப்பையைப் பிறந்த குழந்தையின் முகத்துக்கு நேரே ஆட்டினால் அக்குழந்தை சிரிக்கும். பெரியவர்கள் முகத்துக்கு நேரே ஆட்டினால் அவர்களுக்கு எரிச்சல்தான் வரும். தொடக்கத்தில் உலகம் தெரியாத எங்கள் சமூகத்திற்கு சுய முன்னேற்ற, தன்னம்பிக்கைக் கதைகள் முதலியவை நாங்கள் மேலெழும்பப் பற்றுக்கோடாய் அமைந்தன. இன்று பல துறைகளில் எங்கள் முத்திரையைப் பதித்திருக்கிறோம்! இத்தனை தூரம் வளர்ந்த பிறகும், அதே சுய முன்னேற்றக் கிளுகிளுப்பையை நீங்கள் இன்னும் எங்கள் முகத்துக்கு நேரே ஆட்டிக்கொண்டிருப்பதுதான் எரிச்சலைத் தருகிறது.
எங்கள் எண்ணங்கள் புரிந்தி்டுமா? எரிச்சல் தீர்ந்திடுமா? ஊடகவியலாளர்கள்தான் கவனிக்க வேண்டும்.
எப்போதும்போல் இம்மாத இதழும் பல சுவாரசியமான தலைப்புகளோடு உங்களை வந்தடைந்திருக்கிறது. சென்ற இதழில் தொடங்கிய ‘சிக்கல்களும் சிக்கியவர்களும்’ தொடர் தவிர்க்க இயலாத காரணங்களால் இனி இடம்பெறாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
‘உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு’