இன்றைய நிலையில் நம்முடைய கல்வியில் இருந்து கலாச்சாரம் வரை அனைத்தையும் மேற்கத்திய நாடுகளுடையதைத்தான் பின்பற்றி வருகிறோம் என கூறினால் நீங்கள் நம்புவீர்கள். ஆனால், செக்ஸ் மட்டும் நம் தமிழ் இலக்கியத்தின் மூலம்தான் அயல்நாட்டினருக்கு பரவியது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? G.U. போப் தமிழ் இலக்கியங்களை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்த பின்புதான் செக்ஸ் அவர்களுக்கு வெளிப் பொருளாக ஆனது. அதற்கு முன்பு அவர்கள் நம்மைப் போலவே செக்ஸ் என்றால் மூடி மறைத்துக்கொண்டுதான் இருந்தார்கள். திருக்குறளின் காமத்துப்பாலைப் படித்த பின்புதான் அவர்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார்கள்.
இதனை நாம் டைட்டானிக் படத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். இந்தப் படத்தில் நடித்த பெண்களின் சுண்டுவிரல்கூட வெளியே தெரியாது. அந்த அளவிற்கு அவர்களின் ஆடை அலங்காரம் இருந்திருக்கும். அவர்களது கால்கள் முழுவதும் ஒரு துணியால் மூடப்பட்டிருக்கும். அந்த அளவிற்கு அவர்களது கலாச்சாரத்தை இப்படம் கூறியிருக்கும். ஆனால், இன்றைய நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.
அண்மையில் ஒருவர், ‘செக்ஸ் ஜானர் ஹாலிவுட் போன்ற எல்லா சினிமாவிலும் உள்ளது. தமிழ் சினிமாவிற்கு நான் அந்த ஜானரை அறிமுகப்படுத்தப் போகிறேன்’ என ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை; நான் இந்தக் கட்டுரையை எழுதக் காரணமாக இருக்கும் இயக்குனர் சந்தோஷ் P. ஜெயக்குமார்.
இக்கட்டுரையில் என்னால் முடிந்த மட்டில் கெட்ட வார்த்தைகள் பேசாமல் நான் கூறவந்த கருத்துக்களைச் சொல்ல முயற்சித்திருக்கிறேன். இதில் நான் கூறும் கருத்துக்கள் அனைத்தும் இப்படம் பற்றிய எனது பார்வை மட்டுமே.
இந்தப் படத்தின் கதையைப் பார்ப்பதற்கு முன்பு, இப்படம் எந்த ஜானரின்கீழ் வந்திருக்கிறது என தெளிவாக விளக்க விரும்புகிறேன். இது ‘Adult Horror Comedy Movie’ பிரிவின் கீழ் வருகிறது. அடல்ட் ஹாரர் படத்தை 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம்; அதற்குக் கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி கிடையாது. அதோடு, சென்சார் போர்டின் ‘A’ சர்ட்டிஃபிகெட்டுடன் படம் வெளிவந்துள்ளது. இப்படம் வெளிவருவதற்கு முன்பே, படத்தின் இயக்குனர் இந்தப் படத்தை 18 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் மட்டும் பார்க்கலாம் என மீடியாவிற்குப் பேட்டி கொடுத்துவிட்டார்.
இதற்கு முன்பு தமிழில் அடல்ட் ஹாரர் மூவி வந்திருக்கிறதா என கூகுள் பண்ணினேன். 1991-ஆம் ஆண்டு ‘உருவம்’ என்ற திரைப்படம் இந்த வகையில் வந்திருக்கிறது. இது தவிர, ‘அநாகரிகம்’ போன்ற படங்களும் பிற மொழிகளில் இருந்து டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது.
சரி, படத்துக்குள்ள போகலாம். இந்தப் படம் தொடங்கும்போதே ஒரு வீட்டின் வாசலில் கௌதம் கார்த்திக், மொட்ட ராஜேந்திரன், V.J. ஷா போன்றவர்களின் காலில் நெருப்பு பற்றி எரிகின்றது. அடுத்து, நாயகன் கௌதம் கார்த்திக்கிற்கு அவங்க வீட்டில் ஹீரோயின் வைபவி சண்டில்யாவை பொண்ணு பார்க்கப் போறாங்க. கல்யாணத்திற்கு முன் இருவரும் பழகிப் பார்க்கணும் என்பது பெண்ணுடைய அப்பாவின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர். அதன்படி இருவரும் பழகிப் பார்க்க ஹாங்காங்கில் உள்ள பாங்காக்கிற்குப் போறாங்க. இந்தப் படம் முழுவதும் ஹாங்காங்கில்தான் நடக்கிறது. அங்குள்ள ஒரு பெரிய வீட்டில் 7 நாட்கள் கௌதம் கார்த்திக், வைபவி சண்டில்யா, கௌதமின் நண்பனாக வரும் V.J. ஷா, யாஷிகா ஆனந்த் ஆகிய இரு ஜோடிகள் தங்குறாங்க. அங்கே, சுமார் 25 வருடத்திற்கு முன்பு கன்னி கழியாமல் இறந்து போனதால், ‘ஒரு வெர்ஜீன் ஆணுடன் செக்ஸ் வச்சாத்தான் எனது ஆன்மா சாந்தியடையும்’ என்ற ஒரு விசித்திரமான கோரிக்கையுடன் பேயாக அறிமுகம் ஆகுறாங்க இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் இருக்கும் சந்திரிகா ரவி. அதேநேரம், அவ்வாறு உடலுறவு வைத்துக்கொண்டால் அவர்கள் இறந்து போவார்கள் என்ற உண்மையையும் சொல்லிடுறாங்க. இந்தப் பேயின் ஆசை நிறைவேறியதா, ஆண்கள் எப்படி அங்கிருந்து தப்பிச்சாங்க என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் முதல் பகுதியில் முன்பு என்ன நடந்தது என்பதை நமக்குச் சொல்லுறாங்க. அடுத்த பாதி பாகத்தில் அதற்கான சொலூஷனைத் தேடுறாங்க. படம் துவங்கும்போதே கொஞ்சம் வித்தியாசமாக ஆரம்பிச்சாங்க. அதாவது, மொட்டை ராஜேந்திரன் “இந்தப் படத்திற்கு வருபவர்கள் கட்டாயம் ஒரு டிஷூ பேப்பரை எடுத்து வரவேண்டும்” என்று சொன்னதைக் கேட்டு, நான் கொஞ்சம் ஏடாகூடமா கற்பனையில் இருந்திருந்தேன். ஆனால், அப்படி ஒன்றும் இந்தப் படத்தில் இல்லை.
இந்தப் படத்தின் கதையைப் பற்றி பேசணும் என்றால், வழக்கமான தமிழ் படங்களைப் போலத்தான் இதுவும். ஒருசில படங்களிலிருந்து கருவையும் கதையையும் எடுத்திருக்காரு நம்ம டைரக்டர் சந்தோஷ் P. ஜெயக்குமார். ‘ஹரஹர மஹாதேவகி’யை தொடர்ந்து, இது இவருக்கு இரண்டாவது படம்.
‘8-ஆம் நம்பர் வீடு’ படத்தின் பேயுடைய ரோலும் இதுதான். அந்தப் படத்திலும் பேய் நாயகனுடன் உடலுறவு கொள்ளனும் என்ற தீராத ஆசையுடன் செத்துப் போயிருக்கும். ஆவியாக வந்து அந்த ஆசையைத் தீர்த்துக்கொள்ள ஹீரோயின் உடம்பில் புகுந்துடும். ஆனால், தமிழ் திரைப்படங்களின் வழக்கப்படி, ஒரு சாமியாரின் உதவியுடன் அந்த ஆவி விரட்டப்பட்டு ஹீரோயின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படும்.
‘Hand-Job Cabin’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில், ஒரு பொம்மையின் ஆண்குறியில் இருந்து விந்து வெளியேறுவதும், ஒரு ஆண் போர்வைக்குள் பேய் இருப்பது தெரியாமல் அத்துடன் உடலுறவு கொள்ளப்போய் பின்பு தெரிஞ்சுக்கிறதும் எடுத்திருக்காங்க. இவை எல்லாம் இந்தப் படத்திலும் வருது.
விஜய் டி.வி. பிக்பாஸ் நிகழ்ச்சியை நம்ம இயக்குனர் வச்சு செஞ்சிருக்காரு. பரணி வீட்டைவிட்டு தப்பிச்சு ஓட சுவர் ஏறிக் குதித்தது, பேக்ரவுண்ட் வாய்ஸ், கன்ஃபெஷன் ரூம் போன்றவற்றை படத்துக்குள் கொண்டுவந்திருக்கார்.
நாயகனும் இயக்குனரும் சேர்ந்து வேலை செய்யும் இரண்டாவது படம் இது. பிலே பாயான இவருக்குக் காதலியாக வருபவர்தான் ஹீரோயின் சண்டில்யா. இருவரும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கேரக்டரில் சுமாராக நடித்திருக்கிறார்கள். V.J. ஷாவுக்கும் அவரது காதலிக்கும் எப்போதும் செக்ஸ், செக்ஸ் தான். அதிலும், ஷாவின் காதலி நாயகனின் முன்னாள் காதலி. அவரைப் பொறுத்தமட்டில், எப்போதும் குடி, செக்ஸ் ஆகியவை மட்டும்தான். அதனால இவுங்க பிரிந்து, காமெடியன் மூலம் ஹீரோவுடன் உல்லாசமா இருக்கத் திட்டம் போட்டு, இந்த வீட்டிற்கு வந்திருக்காங்க.
மொட்டை ராஜெந்திரனின் காமெடி கொஞ்சம் ‘உச்’ கொட்டும்படிதான் இருந்தது. ஆனால், எல்லாத் தமிழ் படத்திலேயும் பேய்தான் எல்லாரையும் வச்சு செய்யும்; இங்க, எல்லா ஆண்களும் பேயை வச்சு செஞ்சிருக்காங்க. படத்தில் வரும் சாமியார்கள் மூலம் இன்றைய சாமியார்களின் முகத்திரையைக் கிழித்திருக்கார் நம்ம இயக்குனர். 15 நிமிடத்திற்குள் அங்கிருந்த ஆண்கள் தங்களது உயிரைக் காப்பாற்ற வெர்ஜினிட்டியை இழந்தது கொஞ்சம் காமெடியாக இருந்தது. அதிலும், மொட்டை ராஜேந்திரன் தனது அரைஙான் கயிறை அவிழ்த்து மதுமிதாவின் கையைக் கட்டிப்போட்டு உறவுகொள்வது மரண காமெடி. பேய் நாயகனின் ஜிப்பை அவிழ்த்து விளையாடுவது, பேய் மேக்அப் போட்டு வந்து, “நான் அழகா இருக்கனா?” எனக் கேட்பது மாதிரியான சீனிற்குத் தியேட்டரில் சிரிப்புச் சத்தம். “2 நிமிசத்துக்குள்ள முடிக்கிறது இல்லை. இதெல்லாம் 25 நிமிடம் நீடிக்கணும்” என்ற வசனம், “ஒரு குறிப்பிட்ட தொலைவில் ஒன்றுக்கு இருக்கவேண்டும்” என்று பெண்ணின் தகப்பனார் கூறுவது முதலியவை எல்லாம் சமையல் மந்திரத்தின் விளம்பரம் போல இருந்தது.
படத்தின் இசை எனக்குப் பிடித்திருக்கிறது. மொத்தம் 4 பாடல்கள். அதிலும், ‘ஆன்தம் ஆஃப் போர்ன்’ பாடலில் இன்றைய இளைஞர்களின் நிலைமையை விளக்கியிருக்கிறார்கள். அதாவது, செக்ஸில் உள்ள அனைத்து முறைகளையும் சொல்லி, இறுதியில் ‘சொந்தக் கையில் சொர்க்கம் போனோம்’ என்று கூறியிருப்பது இன்றைய இளைஞர்களுக்கு முற்றிலும் பொருந்தும். ‘பார் சாங்’கில் ஆர்யா கெஸ்ட் ரோல் பண்ணியிருக்காரு. இவர் இயக்குனரின் அடுத்த படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது; அந்தப் படம் ஒரு குடும்பப் பாங்கான படமாம்.
இந்தப் படத்தை நான் திருச்சியில் உள்ள L.A சினிமாஸ்ல பார்த்தேன். இரவு 10 மணி ஷோ; ஹவுஸ்ஃபுல். இது முழுமையான செக்ஸ் படமா என்றால், ஆமாம். செக்ஸும் காமெடியும் கலந்த படம். அதே சமயம் இந்தப் படம் சமூதாயத்தை சீர்குலைக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்வேன். நான் உங்களுக்குச் சில பெயர்களைக் கூறுகிறேன், சன்னி லியோன், ஷகிலா, ரேஷ்மா, சில்க் ஸ்மிதா… இவர்களின் பெயரைக் கேட்டதும் உங்களுக்கு என்ன தோன்றியது? இவர்கள் போர்னோகிராஃபியில் நடித்ததால் நமக்கு அதே ஞாபகம்தான் வரும். காரணம் இங்கிருக்கும் பெரும்பான்மையானவர்களிடையே அகன்ற பார்வை இல்லை.
நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்திவரும் கெட்ட வார்த்தைகளின் தொகுப்பே இந்தப் படம். இந்தப் படத்தில் எல்லாவற்றையும் வெளிப்படையாகக் காண்பிப்பது தவறு என்றால், தமிழ் திரைப்படங்களில் காட்டப்படும் தொப்புளில் பம்பரம் விடுவது, பெண்ணின் புட்டத்தைத் தட்டுவது, பெண்கள் மார்பகங்கள் குலுங்கும் விதம் உடற்பயிற்சி செய்வது முதலியவற்றை நாம் எங்கே போய் பேச? அதனால், இந்தப் படம் ஒரு மரண மொக்கைப் படம் என்று வேண்டுமானால் விமர்சிக்கலாம். மீண்டும் சொல்கிறேன், இது சமுதாயத்தைக் கெடுக்கும் படம் அல்ல. இந்தப் படத்தை நான் இரண்டாம் முறை பார்க்கப்போவதில்லை. ஆனால், ‘பிக்பாஸ் 2’ முடிந்ததும் இதன் இரண்டாம் பாகம் வரும் என்பதில் ஐயம் இல்லை. வரவிருக்கும் இரண்டாம் பாகத்தை நான் இதேபோன்று வெர்ஜின் பையனாகப் பார்த்து, இதுபோன்று விமர்சனம் விரல்மொழியர் இதழுக்கு எழுதுவேன். பார்க்கலாம், புதிய வெர்ஜின் பசங்களோடு இருட்டு அறையில் முரட்டுக் குத்து பாகம் 2.
--
கட்டுரையாளர் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய இளமுனைவர் (M.Phil) படித்து வருகிறார்.
தொடர்புக்கு: [email protected]