அது அவளுக்கு ஏழாம் மாதம். மகன்தான் பிறப்பான் என்ற தன் ஆசையைக் கணிப்பில் ஏற்றி, அவனுக்குக் கவின் என்றும் பெயரிட்டு கற்பனையில் மகிழ்ந்திருந்தாள்.
எனக்கோ, மகள் பிறக்க வேண்டும் என்பதே ஆசை. அதனால், தந்தை-மகள் பாடல்களைத் தொகுத்து, அந்தப் ஃபோல்டருக்கு வெண்பா எனப் பெயரிட்டு, அனுதினமும் கேட்டுக்கொள்வேன். அதுபோலவே அவளுக்கும் தாய்-மகன் பாடல்களைத் தேடித் தொகுத்துத் தந்தேன்.
அந்தத் தொகுப்பில், ‘சின்னத் தாயவள்’, ‘பிள்ளை நிலா’ போன்ற உன்னதமான பாடல்களையும் தாண்டி, அவளை ஈர்த்தது அந்தப் பாடல்! அதைச் சிறியதாகச் செதுக்கித் தரச்சொல்லி, தனது செல்பேசியின் அழைப்பு இசையாகவும் வைத்துக்கொண்டாள்.
என்னைப்போல அவளுக்கு சினிமா பற்றிய அறிதலெல்லாம் கிடையாது. நல்ல பாடலை அறிமுகம் செய்து கேட்கச் சொன்னால் ரசித்துக் கேட்பாள். என் ரசனையை அவளுக்குத் தெரிவிக்கும் நோக்கில் நான் சொல்லிய சில நடுத்தரப் படங்களைப் பார்த்திருக்கிறாள், அவ்வளவுதான். அந்தப் பாடலும் அப்படித்தான்.
பாடல் எந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது என்பதைக்கூட அவள் அறிந்திருக்கவில்லை. ஆனால், கருவில் கவின் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு, அவள் அன்றாடம் பாடிய தாலாட்டு இந்தப் பாடல்தான்.
‘மன்னவா! மன்னவா! மன்னாதி மன்னன் அல்லவா? – நீ
புன்னகை சிந்திடும் சிங்காரக் கண்ணன் அல்லவா?
மழலைகள் யாவும் தேனோ?
மரகத வீணை தானோ?’
தொகுப்பின் ஏனைய பாடல்களைவிட அந்தப் பாடல் தனது மனதை மிகவும் கவர்ந்துவிட்டதாகவும், அது தனக்காகவே எழுதப்பட்ட பாடல் எனவும் பூரித்துப்போவாள். ஒருவேளை நான் அந்தப் பாடலுக்கான காட்சிப் பின்னணியையோ, கதைப்பின்னணியையோ கூறியிருந்தால் அத்தோடு அந்தப் பாடலைக் கேட்பதையே நிறுத்தியிருப்பாள்.
நான் அது பற்றியெல்லாம் அவளிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. மாறாக, இசை ஞானியின் இசையின் மகத்துவத்தை எண்ணி மனதிற்குள்ளேயே வியந்துகொண்டேன். மனைவியிடம் நாம் மல்லுக்கட்டி மறைத்துவைக்கும் இரகசியங்களை உடைப்பதற்கென்றே படைக்கப்பட்ட உயர்ந்த உள்ளத்திற்குச் சொந்தக்காரர்கள் நண்பர்கள்!
ஒரு விடுமுறையின்போது வீட்டிற்கு வந்திருந்த நண்பர் சுரேஷ், விசித்ராவின் செல்பேசியில் அழைப்பு மணியாக இந்தப் பாடல் ஒலிப்பதைக் கேட்டு அதிர்ந்து போனார். “என்னடா இது?” என்றவரிடம் “அதுதான் அவளோட ஃபேவரைட் சாங்” என்றேன்; அமங்களமாகக் கருதியிருப்பார் போலும். விசித்ராவைத் திட்டிக்கொண்டே அந்தப் பாடலின் காட்சி மற்றும் கதைப் பின்னணியை விவரித்தார் நண்பர்.
‘வால்டர் வெற்றிவேல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலில், நேர்மையான காவல் அதிகாரி வெற்றிவேலின் (சத்யராஜ்) பார்வையற்ற மனைவி சுமதி (சுகன்யா) பிறந்த தனது குழந்தையைத் தாலாட்டிப் பாலூட்டுவதாகக் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர் P. வாசு. சமூக விரோதிகளால் விஷம் கலக்கப்பட்டிருப்பதை அறியாமல் பாட்டிலில் கலந்து வைத்த பாலை சுகன்யா கொடுக்க, குழந்தை இறந்துவிடும். இதை அறியாதவளாய் தொடர்ந்து தாலாட்டிக்கொண்டிருப்பார் சுகன்யா.
“உன்னை ஒரு ஈயும் மொய்த்தால் உருகாதா தாயின் சித்தம்னு சுகன்யா பாடும்போது, விஷப்பால் குடிச்ச குழந்தை இறந்து, அது உடம்பில் ஈ மொச்சிக்கிட்டிருக்கும். நடுத்தரப் படங்கள் படங்களல்ல; காவியம். வரிக்குப் பொருத்தமான பின்னணிக் காட்சிகள், காட்சிகளை வார்த்தைகளிலேயே கடத்தும் கவித்துவம்” என்று பார்வை பறிபோவதற்கு முன்பு தான் பார்த்த ‘வால்டர் வெற்றிவேல்’ படத்தின் அந்தக் காட்சியை விவரித்துச் சிலிர்த்தார் நண்பர்.
அவளுக்கு அந்தக் கதைப் பின்னணி கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், தன்னைப் போல ஒரு பார்வையற்ற தாய் பாடுவதாக அமைந்த பாடல் என்பதை அறிந்து நெகிழ்ந்தாள். எப்போதுமே ஒருவகை சாந்த உணர்ச்சி தவழும் சுனந்தாவின் குரல் பாடலுக்கு மிகப் பொருத்தமாய் அமைந்தது.
எல்லாம் இனிதாய் நிறைவேற வாழ்வின் முழுமையாய் வந்து பிறந்தாள் வெண்பா. கவின் என்ன, வெண்பா என்ன? மழலைகள் யாவும் தேன்தான் என்ற புரிதலில் புன்னகைத்தவாரே என் துணை தொடர்கிறாள் அவள் தாலாட்டை (பாடலைக் கேட்க).
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.
…ரதம் பயணிக்கும்
--
தொடர்புக்கு: [email protected]