எழுச்சியோடு மகளிர் தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்த பெண்கள் சமூகத்திற்கு, அதே நாளின் பிற்பகலில் வெற்றிச் செய்தியாக வந்து சேர்ந்தது ‘ஹாதியாவின் திருமணம் செல்லும்’ என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.
இந்த தீர்ப்பின் வாயிலாக வயதுவந்த பெண்களுக்கான சட்ட பாதுகாப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்திருப்பதாக ஆன்றோர் பெருமக்கள் சிலாகித்துக்கொண்டிருக்க, சமூகத்தில் பெண்களுக்கும், அவர்களின் சுய நிர்ணய உரிமைக்கும் எவ்வித மதிப்பும் இல்லை என்பதை அம்பலப்படுத்துவதாக அமைந்துவிட்டது அடுத்த நாள் சென்னையில் பட்டப் பகலில் நடந்த கல்லூரி மாணவி அஷ்வினியின் படுகொலை.
இங்கு காதலித்தாலும், காதலை மறுத்தாலும் சிதைக்கப்படும் பலியாடுகளாகப் பெண்களே இருக்கிறார்கள் என்பது, நாகரிகம் அடைந்த ஒரு சமூகத்தில் நாணத்தக்க செய்தி. சமூகத்தின் இத்தகைய அவலச்சூழலைக் களைய, அனைத்துத் தளங்களிலும் திறந்த மனதுடன்கூடிய உரையாடல்கள் அவசியமாகின்றன. அந்த உரையாடல்கள் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும் அமைதல் வேண்டும்.
அத்தகைய ஒரு முயற்சியைக் கையிலெடுத்தபடி, பார்வையற்ற பெண்களைப் பேசுபொருளாகக்கொண்ட பல கட்டுரைகளுடன் நமது மார்ச் மாத விரல்மொழியர் இதழ் மகளிர் தின சிறப்பிதழாக மலர்கிறது.
இந்த இதழில், பார்வையற்ற பெண்கள் தங்கள் சாதனைகள், வேதனைகள், அன்றாடத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பொதுவான சிக்கல்கள் பற்றி விரிவாகத் தங்கள் படைப்புகளின் வழியே பேசுகிறார்கள். ஆர்வமுடைய ஆறு பார்வையற்ற ஆண்களின் முயற்சியோடு கைகோர்த்திருக்கும் படைப்பூக்கம் கொண்ட இந்தப் பெண்களால், தொடங்கிய மூன்றே மாதங்களில், ஒரு புதிய பரிமாணத்தை அடைவதில், தனது வாசகர்களோடு இணைந்து பெருமிதம் கொள்கிறது விரல்மொழியர் ஆசிரியர் குழு.
பெண்கள்தான் என்றில்லை; பார்வையற்றோரின் மேன்மையில் உண்மையான அக்கறையும், சீரிய பார்வையும் கொண்ட அனைவரையும் அரவணைத்துக்கொள்ள விரும்புகிறது உங்கள் விரல்மொழியர்.
வாருங்கள். பரஸ்பரம் பகிர்வோம். பகிர்தலால் தெளிவோம். தெளிந்ததைத் தீர்க்கமாய் திக்கெட்டும் தெரிவிப்போம்.
அனைவருக்கும் விரல்மொழியரின் மகளிர் தின வாழ்த்துக்கள்.