2013-ஆம் ஆண்டு தொடங்கி, மீண்டும் மீண்டும் பார்வையற்றோர் போராட்டம் செய்ய காரணம் என்ன என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். பார்வையற்றோர் அரசிற்கு எதிராகவோ, தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவோ இந்த போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. பட்டம் பல படித்து, பட்டயங்கள் பல பெற்று (M.A., M.Phil., M.Ed., Ph.D.), தேசிய மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வுகளில் (NET, SLET, CTET, TNTET) தேர்ச்சி பெற்றிருந்தும் பணிவாய்ப்பு மறுக்கப்படுவதும், இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாததுமே இந்த போராட்டங்களுக்கு காரணம். 2013 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக அரசு வெளியிட்ட அரசாணைகள் என்ன என்பதையும், அதனால் பார்வையற்றோர் பெற்ற பயன் என்ன என்பதையும் காண்போம்.
போராட்டம் செப்டம்பர் 2013
2013-ஆம் ஆண்டில் தமிழகத்தைத் திரும்பி பார்க்கச் செய்த இப்போராட்டம் தொடர்ந்து 12 நாட்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பார்வையற்றோர் எப்படி எல்லாம் நடத்தப்பட்டார்கள் என்பதை அனைவரும் அறிவோம். இந்த போராட்டத்தின் விளைவாக கிடைத்ததுதான் அரசாணை நிலை எண் 260, நாள் 17.12.2013.
அரசாணை 260
பின் வரும் ஆணைகள் வழங்கலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது:
அரசாணையில் குறிப்பிட்டதுபோல, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வும் அதற்கான பயிற்சியும் 2014 ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி வாய்ப்பு எப்போது, எத்தனை பணியிடங்கள் ஒதுக்கப்படுகிறது என்ற எவ்வித குறிப்பும் அரசாணையில் இடம்பெறவில்லை.
இருக்கும் பின்னடைவு பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படும் காலிப் பணியிடங்கள் கொண்டு பணி அமர்த்தப்படுவர் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 2013-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்திருக்கும் பார்வையற்றவர்கள் இன்னும் பணியமர்த்தப்படவில்லை.
‘இருக்கும் பின்னடைவு பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படும் காலிப் பணியிடங்கள் கொண்டு, அரசு விதிகளுக்குட்பட்டு பணியமர்த்தப்படுவர்’ என்ற வரிகள், எந்த சிறப்பு அறிவிப்பையும் வெளிப்படுத்தவில்லை. அரசு நடைமுறையில் செய்யவேண்டிய ஒன்றை, புதிதாக செய்வதுபோல் அரசாணையில் குறிப்பிட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த அரசாணையின் விளைவாக, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் அதற்கான பயிற்சி நடத்தப்பட்டதைத் தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை.
போராட்டம் மார்ச் 2015
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக வெளியான அரசாணை நிலை எண் 260 பார்வையற்றோரின் பணி வாய்ப்பிற்கு உதவாத நிலையில், 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் பணி வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை நடத்தியது. 9 நாட்கள் நடைபெற்ற இப்போராட்டத்தின் விளைவாக அரசாணை 21, அரசாணை 107, 108 ஆகியவை 20.03.2015 மற்றும் 14.05.2015 ஆகிய நாட்களில் தமிழக அரசால் வெளியிடப்பட்டன.
அரசாணைகள் 21, 107, 108
இந்த அரசாணைகள், தேசிய அளவிலான விரிவுரையாளர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்று காத்திருக்கும் பார்வையற்றவர்களை அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணியமர்த்தவும், அவ்வாறு பணியமர்த்தப்படும் பார்வையற்றவரின் ஊதியத்தில் 25 சதவிகிதத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்றும் குறிப்பிடுகிறது.
இதன்படி, தகுதிவாய்ந்த பார்வையற்ற பட்டதாரிகள் அவசர அவசரமாக சில அரசுக் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் விருந்தமை விரிவுரையாளர்களாக (Guest Lecturers) பணியமர்த்தப்பட்டனர். அரசாணையைவிட, இந்த நியமணங்களில் அதிகாரிகளின் வாய்மொழி ஆணைகள் அதிகம் இடம்பெற்றது. அதாவது, தனியார் கல்லூரிகளில் விருந்தமை விரிவுரையாளர் என்ற பணியிடம் இல்லாத நிலையிலும், நீங்கள் இவர்களுக்கு விருந்தமை விரிவுரையாளர் பணி வழங்க வேண்டும் என்றும், ஊதியமாக ரூ. பத்தாயிரம் வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வாய்மொழி ஆணை மூலம் நியமணம் வழங்கினர். ஆனால், அரசாணையில், கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக மற்றும் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டதே தவிர, விருந்தமை விரிவுரையாளர் என்று குறிப்பிடப்படவில்லை. மேலும், கல்லூரிகளில் பணியாற்றும் மற்ற பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிட அதிகமாக வழங்குதல் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால், மற்றவர்களுக்கு இணையாக வழங்கப்பட வேண்டும் என்று பொருள் கொள்ளலாம். ஊதியத்தில் 25 விழுக்காடு அரசு வழங்கும் என்று குறிப்பிடப்பட்டதன் தொடர்பாக எவ்வித ஆணையும் தனியாக வழங்கப்படவில்லை. அதன் விளைவாக, பணியமர்த்தப்பட்டவர்களுக்கு அந்த 25 விழுக்காடு ஊதியம் இன்றளவும் வழங்கப்படவில்லை. இதனால் ரூ. 5000 மட்டுமே பலருக்கு ஊதியமாகக் கிடைத்தது. எனவே, பலர் அந்த பணியை விட்டுவிட்டு வியாபாரம் செய்ய தொடங்கிவிட்டனர்.
இப்படியாக, ஒவ்வொரு முறையும் அரசு அரசாணைகளை வெளியிடுவதும், பார்வையற்றோர் அதனை நம்பிக் காத்திருப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
போராட்டம் மார்ச் 2018
தொடர்ச்சியாக அரசு பார்வையற்றோர் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்யாத நிலையில், 5.3.2018 அன்று மீண்டும் மிகுந்த எதிர்பார்ப்போடு வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து போராட்டம் தொடங்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போராட்டம், தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு வழங்கியதனை அடிப்படையாகக் கொண்டு முடிவிற்கு வந்தது. ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக பணிக்காக காத்திருக்கும் பார்வையற்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
--
கட்டுரையாளர் சென்னை இந்தியன் வங்கி கிளையில் பணியாற்றி வருகிறார்.
தொடர்புக்கு: [email protected]

- பி.எட். படித்து பணி இல்லாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தவும், இத்தேர்வில் தகுதி பெறும் பி.எட். பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும், இனிமேல் ஏற்படக்கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்த அனுமதி வழங்கப்படுகிறது.
- சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்கப்படும்.
- பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்படும்.
- முதுகலை பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்களுக்கு, அரசு விதிகளுக்குட்பட்டு தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக்கூடிய காலிப் பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்படின், அவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்தப்படுவர்.
- தேசிய தகுதித் தேர்வு மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 100 முதுகலை பட்டம் பெற்ற பார்வையற்றவர்களை, அரசு விதிகளுக்குட்பட்டு தற்போது கல்லூரிகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படும் காலிப் பணியிடங்களில் உதவிப் பேராசிரியர்களாக பணியமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாணை தொடர்கிறது.