கணிதத்தைப் பலரும் கசப்பு மருந்து என ஒதுக்குவதைக் கண்கூடாகக் கண்டு வருகிறோம். ஆனால், சுஷ்மா எனும் பார்வை மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்று, சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். விரல்மொழியருக்காக அவரைச் சந்தித்து உரையாடுகிறார் சித்ரா.
சித்ரா: உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை வாசகர்களுக்குச் சொல்லலாமே?
சுஷ்மா: எனது சொந்த ஊர் மஹாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள சாவல். அப்பா ஆசிரியர், அம்மா இல்லத்தரசி. என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி. தொடக்கக் கல்வி முதல் B.Sc. வரை எங்கள் ஊரிலேயே படித்தேன். ஜல்கானில் M.Sc.-யும், சென்னை IIT-யில் முனைவர் பட்டத்தையும் முடித்தேன்.
சி: கணிதத்தின் மீது உங்களுக்கு எப்படி பிடிப்பு வந்தது?
சு: சிறு வயதிலிருந்தே கலைப் பாடங்களைவிட கணிதம், அறிவியல் பாடங்களில்தான் எனக்கு அதிக ஆர்வம். கணிதப் புதிர்கள், மனக் கணக்கு போன்றவற்றின் மீதுள்ள பிடிப்பே கணிதத்தின்மீது நாட்டம் செலுத்தக் காரணம். அறிவியலில் செய்முறைப் பயிற்சிகளை நம்மால் செய்ய இயலாது. அதுவும் நான் கணிதத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக அமைந்தது.
சி: மஹாராஷ்டிராவில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த வகுப்பு வரை கணிதம் போதிக்கப்படுகிறது?
சு: நான் சிறப்புப் பள்ளியில் படிக்கவில்லை. பார்வையுள்ளோர் பயிலும் பள்ளியில்தான் படித்தேன். அதனால், எனக்கு அது பற்றி தெரியவில்லை.
சி: உங்களுக்கு ஓரளவு பார்வை தெரியுமா?
சு: B.Sc. படிக்கும் வரை புத்தகம் வாசிக்கும் அளவுக்குப் பார்வை இருந்தது. பின் முழுவதுமாகக் குறைந்துவிட்டது.
சி: சிறப்புப் பள்ளிகளைச் சென்று பார்த்ததுண்டா?
சு: இல்லை. ஆனால், சென்னையில் உள்ள NIVH-க்கு (National Institute for Visually Handicapped) சென்று, அங்கு பார்வையற்றோருக்கு கொடுக்கப்படும் தொழில் பயிற்சிகளைப் பார்த்திருக்கிறேன்.
சி: ஒரு பார்வையற்றவராகக் கணிதம் படிக்கும்போது எத்தகைய சவால்களை எதிர்கொண்டீர்கள்?
சு: கரும்பலகையில் எழுதப்படுவதை என்னால் பார்க்க முடியாது. அதனால், வகுப்பில் நடத்தப்படும் பாடம் பற்றிய குறிப்புகளை என்னால் சரிவர எடுக்க முடியாது. என் வகுப்புத் தோழர்கள்தான் எனக்கு பெரிதும் உதவினர்.
சி: ஆசிரியர்கள் உங்களை எவ்வாறு நடத்தினர்?
சு: நான் பார்வைக் குறையுடையவளாய் என்னை காட்டிக்கொள்ளத் தயங்கினேன்; சாதாரண நபராகவே என்னை காட்டிக்கொள்ள முயன்றேன். எனது பார்வைக் குறைபாட்டை ஆசிரியர்கள் அறிந்திருந்தாலும், அதுபற்றி அவர்கள் எதுவும் பேசியதில்லை.
சி: உங்களது திருமண வாழ்வு பற்றி கூறுங்களேன்?
சு: ஜல்கானில் M.Sc. படிக்கத் தொடங்கியபோது எனது பார்வை மேலும் மோசமானது. அங்கு வேலை பார்த்த பேராசிரியர் வீரமணி எனக்குப் பெரிதும் உதவினார். M.Sc. முடித்ததும் என்னைத் திருமணம் செய்யும் விருப்பத்தைக் கூறினார். எனது முன்னேற்றத்திற்கு உதவியாய் இருந்த அவரையே எனது வாழ்க்கைத் துணையாகக் கரம் பிடித்தேன். எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். பொருளாதாரத்தில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்டம் பெற்றவர். திருமணமாகி தற்போது லண்டனில் வசிக்கிறார்.
சி: உங்களது முனைவர் பட்ட ஆய்வு பற்றி கூற முடியுமா?
சு: கணவருக்குப் பணி உயர்வு கிடைத்து சென்னை வந்தோம். எனது கணவர் முனைவர் பட்டப் படிப்பில் சேர எனக்குப் பக்கபலமாக இருந்தார். கல்வி உதவித் தொகை பெற்று, சென்னை IIT-யில் 1989-இல் Ph.D. மாணவியாகச் சேர்ந்தேன். ‘பகுப்பாய்வுக் கோட்பாடு’ குறித்து ஆய்வு செய்து, 1995-ல் முனைவர் பட்ட ஆய்வேட்டைச் சமர்ப்பித்தேன்.
சி: தற்போது வேதிக் மேத்ஸ் அதிக கவனம் பெற்று வருகிறது. அதைக் கொண்டு கணிதப் பாடத்தில் சிறப்புறுவது சாத்தியமா?
சு: வேதிக் மேத்ஸைக் கொண்டு கணக்கிட மட்டும்தான் முடியும்.
சி: கணக்கிடுதல்தானே கணிதம்?
சு: அப்படி இல்லை. பகுத்தாய்தல், தர்க்கவியல் போன்று கணக்கிடுதல் என்பதும் கணிதத்தின் ஒரு கூறுதான். கணிதம் பள்ளி அளவில் மட்டுமே கணக்கிடுதலை அடிப்படையாகக் கொண்டு போதிக்கப்பட்டு வருகிறது. வேதிக் மேத்ஸ் பள்ளிக் குழந்தைகளுக்குப் பெரிதும் பயன்படும்.
சி: கணிதத்தில் சாதித்த ஒரே பார்வையற்றவராக நீங்கள் இருக்கிறீர்கள்!
சு: இல்லை, நான் மட்டுமில்லை; பலர் படித்துள்ளனர். உதாரணமாகச் சொன்னால், தன்வீர் ஜெயின் என்பவர் டெல்லி IIT-யில் படித்து இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
சி: நீங்கள் பார்வையுள்ளோர் படிக்கும் பள்ளியில் படித்தீர்கள். ஆனால், பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில் படிக்கும் பார்வையற்றவர்கள் கணிதம் படித்து சாதிக்க இயலுமா?
சு: நிச்சயமாய் இயலும். ஆனால், பணி வாய்ப்புகளைப் பெறுவதில் சிக்கல் உள்ளதே! அண்மையில் எங்கள் பல்கலையில் பார்வைக் குறையுடைய ஒரு பெண் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு இன்னும் பணி கிடைக்கவில்லை. எனவே, பணி வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும் பட்டப் படிப்புகளையே பார்வைக் குறையுடையோர் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
சி: அப்படி என்றால், பல போராட்டங்களுக்குப் பிறகுதான் நீங்கள் இந்த பணியில் சேர்ந்திருப்பீர்கள்.
சு: ஆமாம். 1996-இல் முனைவர் படிப்பை முடித்தேன். பணிக்காக 4 ஆண்டுகள் பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தேன். 2000-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டேன். 20 நபர்கள் வந்திருந்தனர். அதில் எனது திறமைகளை நிரூபித்து, விரிவுரையாளராக பணியில் சேர்ந்தேன். முக்கியமாக, அப்போதய துணை வேந்தர் பொன். கோதண்டராமன் அவர்கள் எனது திறமையை அங்கீகரித்தார். தமிழ் துறை பேராசிரியரான அவரின் கீழ் சில பார்வை மாற்றுத்திறனாளிகள் முனைவர் பட்ட ஆய்வுகளை முடித்திருந்ததால், அவருக்கு நம்மைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தது.
சி: அதிக நபர்கள் கணிதத்தைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் அரசிடம் பணி வாய்ப்பு குறித்து பேசலாம் அல்லவா?
சு: கட்டாயம் பேசலாம். இருந்தாலும், கணிதத்தின்மீது அதீத ஆர்வம் உள்ளவர்களாக நம்மவர்களை நாம் உருவாக்கவேண்டும்.
சி: சக பணியாளர்களும், மாணவர்களும் உங்களை எப்படிப் பார்க்கின்றனர்?
சு: எவ்வித பாரபட்சமும் காட்டாமல் சமமாக நடத்துகின்றனர்.
சி: வகுப்புகளை எவ்வாறு நடத்துகிறீர்கள்? உதவியாளர் யாரேனும் வைத்திருக்கிறீர்களா?
சு: உதவியாளர் என்று யாருமில்லை; நானேதான் வகுப்பை நடத்துகிறேன். எழுதி விளக்க வேண்டியதை கரும்பலகையில் மாணவர்களை எழுதச் சொல்வேன்.
சி: இன்று நமக்கென நிறைய கருவிகள் வந்துவிட்டன. நாமும் பார்வையுள்ளவர்களைப் போல வாசிக்க, எழுத முடியும். இத்தகைய தொழில்நுட்பக் கருவிகளின் துணையுடன் கணிதம் படிக்க இயலாதா?
சு: முடியவில்லை. கணிதத்தில் நிறைய குறியீடுகள் உள்ளன. அவற்றைத் திரை வாசிப்பு மென்பொருட்கள் வாசிப்பதில்லை. பிற பாடங்களைப் போல, ஒலிக் கோப்புகளாகப் பதிவு செய்து படிப்பதும் கடினம். ஆனாலும், சிலர் கடுமையாக முயன்று படிக்கிறார்கள். உதாரணமாக, அமெரிக்காவைச் சேர்ந்த P.V. ராமன் என்ற பார்வையற்றவர் மும்பை IIT-யில் M.Sc. கணிதம் படிக்கும்போது, நீண்டதாக இருந்த நிமத் குறியீடுகளை (பார்வையற்றோர் பயன்படுத்தும் பிரெயில் கணிதக் குறியீட்டு முறைக்கான பெயர்) சுருக்கி, அவரே புதிய கணிதக் குறிகளை உருவாக்கிப் பயன்படுத்தினார். தேர்வுகளை பிரெயில் முறையில் குறித்த நேரத்திற்குள் எழுதியும் காட்டினார்.
சி: இன்றைய பார்வையற்ற பெண்களுக்கு நீங்கள் சொல்லும் மகளிர் தினச் செய்தி?
சு: இங்கு ஒரு பார்வையற்ற பெண் பொருளாதாரம் படிக்கிறார். அவரைப் பார்க்கும்போதெல்லாம், இன்றைய பார்வையற்ற பெண்கள் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பெற்றோர் மற்றும் நண்பர்கள் துணை இருந்தால் கடினமான இலக்கையும் நாம் வெற்றி கொள்ளலாம்.
தொடர்புக்கு: [email protected]
தொகுப்பு: பொன். சக்திவேல்