உன்னை அறிந்தால் - அ. கௌரி
வருங்காலத் தலைவனே! வளர்பிறையாய் வளர்பவனே!
தயங்காமல் தேர்வினையே, தைரியமாய் எதிர்கொள்ளடா!
விளங்காத கேள்வியென விட்டுவிட்டுச் செல்லாதே,
பழங்காலக் கதைகளென பரிகசித்துத் தள்ளாதே!
உறங்காத உத்வேகம், ஊக்கமுடன் உற்சாகம்,
வழங்காத வெற்றியுண்டோ? வாட்டமென்ன சொல் மகனே!
கேள்வியை ஒருமுறை படித்திடணும் - வரும்
விடைகளை மனதில் நிறுத்திடணும்!
தோல்வியின் பயத்தைத் துரத்திடணும் - அதில்
தளர்வுகள் இல்லா நிலை வரணும்!
எண்ணத்தை ஒன்றாய் இணைத்திடணும் - கேள்வி
எண்களை முறையாய் எழுதிடணும்!
எழுத்துக்கள் முத்தாய் இருந்திடணும் - தாளை
எடுப்பவர் மனமும் குளிர்ந்திடணும்!
அடித்தல்கள் திருத்தல்கள் தவிர்த்திடணும் - மிக
அழகிய வரிகளாய் அமைத்திடணும்!
முடித்த பின் ஒருமுறை படித்திடணும் - பிழை
முற்றிலும் நீக்கிட முயன்றிடணும்!
ஒவ்வொரு விடைகளின் முடிவினிலும் - ஒரு
வரிக்கோ டிடுவது சிறப்பாகும்,
வெவ்வே றென்பதைக் குறிப்பதற்கே - அது
வேண்டிய தென்பது முறையாகும்!
முயலாத முயலைப் போல் பிழைக்காதே - அதற்கு
முற்சான்றாய் என்றுமே இருக்காதே!
தளராத ஆமையை மறக்காதே - உனது
தன்னம்பிக்கையை இழக்காதே!
முடியாததென்றொன்றும் இல்லையடா - அதில்
முயலாததொன்றுதான் தொல்லையடா!
கடிதானதுண்டோ நீ சொல்லிடடா - அதை
எளிதாக்கிக் கொள்வதே உன் கையிலடா!
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் - காலம்
காத்திருக்காது அதை ஈட்டிக் கொள்!
மாற்றத்தில் மனதினைப் பழக்கிக்கொள் - வாழ்வில்
மகிழ்ச்சியை என்றும் உனதாக்கிக்கொள்!
--
கவிஞர் திருச்சிராப்பள்ளி மாவட்டக் கருவூலத்தில் கணக்கராகப் பணியாற்றி வருகிறார்.
தொடர்புக்கு: [email protected]
#####
புதுயுகப் பதுமை - D. தாஹிரா ஷஃபியுல்லா
விதிவழி நடந்து பல சதியினைக் கடந்து தன்
மதியினால் உயர்ந்த பெண்ணினமே!
நீ முகவரி காண இந்த ஜகத்தினை ஆள புது
யுகந்தனை படைக்கும் கண்மணியே!
அடுப்பறை அனலில் பொசுங்கிய கனவை இன்று
மறுமுறை உயிர்ப்பித்த பெண்ணினமே! - புது
விடியலைத் தேடி நீ புறப்பட்டதாலே பல
புரட்சிகள் விளைந்தன கண்மணியே!
சாத்திரப் பேயை நீ ஓட்டிடும்போது பல
யுத்தத்தின் சத்தங்கள் கேட்டனவே! - உன்
ரௌத்திரத் தீயில் கருகியே போகும் பல
பித்தர்கள் பதித்திடும் முத்திரையே!
மடமையின் பெயரில் உனை ஒடுக்கிடத்தானே
பழமையின் சாயங்கள் பூசினரே! - உன்
திறமையில் பொழியும் புதுமையால்தானே
வெளுத்தது மடந்தையின் பேதமையே!
சீதனம் கேட்டு சாதனை புரியும்
சில ஆண்களின் வர்க்கத்தை சபித்திடுவாய்!
நூதனமான உன் சரித்திரச் சாரல்
அவையத்தை நனைத்திட அனுமதித்திடுவாய்!
அபிநயப் பிறவி அற்புதக் கவி நீ என்ற
வர்ணனை வார்த்தைக்கு செவி மடுத்திடுவாய்!
அதனையும் தாண்டி எதனையோ தேடும் சில
வக்கிரப் பார்வைக்கு விடை கொடுத்திடுவாய்!
விண்வெளிச் சாலைகள் சங்கதி சொல்லிட
நங்கையின் பாதங்கள் பதிந்தனவோ! - அது
மங்கையர் பிறப்பெல்லாம் மாதவம் என்கின்ற
முந்தைய வாக்கினை மெய்ப்பிக்கவோ!
திண்ணிய மனதுடன் எண்ணிய செயல்களை
நுண்ணிய அறிவினால் வென்றிடுவாய்!
அன்பினால் ஒரு யுகம் அமைத்திடும் தனி ரகம்
பெண்மையின் வரமென்று நிலைநிறுத்திடுவாய்!
விடியலின் சாயலில் விந்தைகள் புரிபவள்
அதிசயப் பிறப்பென்று முழங்கிடுவோம்! - முழு
விடுதலை தேடிடும் பெண்களின் வளர்ச்சிக்கு
தடையின்றி அதனை வழங்கிடுவோம்!
--
கவிஞர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர்.
தொடர்புக்கு: [email protected]
வருங்காலத் தலைவனே! வளர்பிறையாய் வளர்பவனே!
தயங்காமல் தேர்வினையே, தைரியமாய் எதிர்கொள்ளடா!
விளங்காத கேள்வியென விட்டுவிட்டுச் செல்லாதே,
பழங்காலக் கதைகளென பரிகசித்துத் தள்ளாதே!
உறங்காத உத்வேகம், ஊக்கமுடன் உற்சாகம்,
வழங்காத வெற்றியுண்டோ? வாட்டமென்ன சொல் மகனே!
கேள்வியை ஒருமுறை படித்திடணும் - வரும்
விடைகளை மனதில் நிறுத்திடணும்!
தோல்வியின் பயத்தைத் துரத்திடணும் - அதில்
தளர்வுகள் இல்லா நிலை வரணும்!
எண்ணத்தை ஒன்றாய் இணைத்திடணும் - கேள்வி
எண்களை முறையாய் எழுதிடணும்!
எழுத்துக்கள் முத்தாய் இருந்திடணும் - தாளை
எடுப்பவர் மனமும் குளிர்ந்திடணும்!
அடித்தல்கள் திருத்தல்கள் தவிர்த்திடணும் - மிக
அழகிய வரிகளாய் அமைத்திடணும்!
முடித்த பின் ஒருமுறை படித்திடணும் - பிழை
முற்றிலும் நீக்கிட முயன்றிடணும்!
ஒவ்வொரு விடைகளின் முடிவினிலும் - ஒரு
வரிக்கோ டிடுவது சிறப்பாகும்,
வெவ்வே றென்பதைக் குறிப்பதற்கே - அது
வேண்டிய தென்பது முறையாகும்!
முயலாத முயலைப் போல் பிழைக்காதே - அதற்கு
முற்சான்றாய் என்றுமே இருக்காதே!
தளராத ஆமையை மறக்காதே - உனது
தன்னம்பிக்கையை இழக்காதே!
முடியாததென்றொன்றும் இல்லையடா - அதில்
முயலாததொன்றுதான் தொல்லையடா!
கடிதானதுண்டோ நீ சொல்லிடடா - அதை
எளிதாக்கிக் கொள்வதே உன் கையிலடா!
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் - காலம்
காத்திருக்காது அதை ஈட்டிக் கொள்!
மாற்றத்தில் மனதினைப் பழக்கிக்கொள் - வாழ்வில்
மகிழ்ச்சியை என்றும் உனதாக்கிக்கொள்!
--
கவிஞர் திருச்சிராப்பள்ளி மாவட்டக் கருவூலத்தில் கணக்கராகப் பணியாற்றி வருகிறார்.
தொடர்புக்கு: [email protected]
#####
புதுயுகப் பதுமை - D. தாஹிரா ஷஃபியுல்லா
விதிவழி நடந்து பல சதியினைக் கடந்து தன்
மதியினால் உயர்ந்த பெண்ணினமே!
நீ முகவரி காண இந்த ஜகத்தினை ஆள புது
யுகந்தனை படைக்கும் கண்மணியே!
அடுப்பறை அனலில் பொசுங்கிய கனவை இன்று
மறுமுறை உயிர்ப்பித்த பெண்ணினமே! - புது
விடியலைத் தேடி நீ புறப்பட்டதாலே பல
புரட்சிகள் விளைந்தன கண்மணியே!
சாத்திரப் பேயை நீ ஓட்டிடும்போது பல
யுத்தத்தின் சத்தங்கள் கேட்டனவே! - உன்
ரௌத்திரத் தீயில் கருகியே போகும் பல
பித்தர்கள் பதித்திடும் முத்திரையே!
மடமையின் பெயரில் உனை ஒடுக்கிடத்தானே
பழமையின் சாயங்கள் பூசினரே! - உன்
திறமையில் பொழியும் புதுமையால்தானே
வெளுத்தது மடந்தையின் பேதமையே!
சீதனம் கேட்டு சாதனை புரியும்
சில ஆண்களின் வர்க்கத்தை சபித்திடுவாய்!
நூதனமான உன் சரித்திரச் சாரல்
அவையத்தை நனைத்திட அனுமதித்திடுவாய்!
அபிநயப் பிறவி அற்புதக் கவி நீ என்ற
வர்ணனை வார்த்தைக்கு செவி மடுத்திடுவாய்!
அதனையும் தாண்டி எதனையோ தேடும் சில
வக்கிரப் பார்வைக்கு விடை கொடுத்திடுவாய்!
விண்வெளிச் சாலைகள் சங்கதி சொல்லிட
நங்கையின் பாதங்கள் பதிந்தனவோ! - அது
மங்கையர் பிறப்பெல்லாம் மாதவம் என்கின்ற
முந்தைய வாக்கினை மெய்ப்பிக்கவோ!
திண்ணிய மனதுடன் எண்ணிய செயல்களை
நுண்ணிய அறிவினால் வென்றிடுவாய்!
அன்பினால் ஒரு யுகம் அமைத்திடும் தனி ரகம்
பெண்மையின் வரமென்று நிலைநிறுத்திடுவாய்!
விடியலின் சாயலில் விந்தைகள் புரிபவள்
அதிசயப் பிறப்பென்று முழங்கிடுவோம்! - முழு
விடுதலை தேடிடும் பெண்களின் வளர்ச்சிக்கு
தடையின்றி அதனை வழங்கிடுவோம்!
--
கவிஞர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர்.
தொடர்புக்கு: [email protected]