கடிதம் என்கிற சொல்லுக்குள் யுகயுகமாகப் புதுமைகளும் புரட்சிகளும் வெடித்துக் கிளம்பின என்பது வரலாறு. சார் மன்னர்களின் ஆட்சிக்கு எதிராக எழுந்த புரட்சிக்கு வித்திட்டவை, லெனின் ஐரோப்பாவிலிருந்து எழுதிய கடிதங்கள். இந்திரா பிரியதர்ஷினியை இரும்பு மனுஷியாக்கியவை, அடிமை இந்தியாவின் சிறைக்குள் இருந்தபடி நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள். டிஸ்கவரி ஆஃப் இந்தியா (Discovery of India) என்கிற தொகுப்பாக வெளியிடப்பட்ட அந்தக் கடிதங்கள், உலகத்தின் அனைத்து மூலைகளிலும் தோன்றிய புரட்சிகளின் வரலாறுகளைப் பேசுபவை.
செல்ஃபோன்களின் ஆக்கிரமிப்பற்ற அந்த நாட்களில், நாமும் கடிதங்கள் எழுதினோம். யாருக்கு, எப்போது, எப்படி எழுதினோம் என்பதைப் பருவங்கள் தீர்மானித்தன. ஆனால், அந்தக் கடிதங்களில் அன்பை அடிநாதமாகக் கொண்ட உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டன. உடனுக்குடன் கிடைக்கப்பெறாத பதில்களுக்கான கேள்விகளில் உறவுகள் பலப்பட்டனவேயன்றி சிதையவில்லை. காத்திருப்பால், பொறுமை நம் இயல்புகளில் ஒன்றானது. சிந்தித்து எழுதியதால், நமக்கான தேவைகளிலும் நாட்டங்களிலும் ஒரு சுய தெளிவு இருந்தது.
பெற்றோருக்கு, நண்பனுக்கு, காதலிக்கு என கடிதங்களின் வழக்கமான களங்களும் அதன் நோக்கங்களும் நாம் அறிந்ததே. ஆனால், புதிதினும் புதிதாக, இங்கு ஒரு பெண் தனக்குப் பிறவாத மகளுக்காய், இன்னும் தெளிவாகச் சொன்னால், தான் பிறப்பிக்க இயலாத மகளுக்காய் கற்பனையில் எழுதுகிற கடிதம், இயக்குனர் சிகரம் K. பாலச்சந்தர் அவர்களின் மாறுபட்ட சிந்தனையின் வெளிப்பாடு. அவரது 99-ஆவது படம் ‘கல்கி’. ‘ஜாதிமல்லி’, ‘டூயட்’ போன்ற அதிகம் பேசப்படாத திரைப்படங்களுக்குப் பிறகு, அனைவரும் கல்கியைப் பற்றியே பேசும்படியான புதிய புதிய விவாதங்களைத் தோற்றுவித்த கதைக்களம்.
குழந்தை பெறும் வாய்ப்பை இழந்துவிட்ட ஒரு பெண்ணுக்கான நீதியை அவள் கணவனிடமிருந்து பெற்றுத்தர, தன் கற்பையும் இழக்கத் துணிந்த கல்கி என்கிற புதுமைப்பெண்ணின் பாத்திர வார்ப்பில் அதே K.B. முத்திரை. இதெல்லாம் சாத்தியமா என்று கேட்டவர்களுக்கு திரு. K.B. அவர்கள் சொன்ன பதில், “ஒரு பெண் நினைத்தால் எதுவும் சாத்தியம்!”
‘முத்து முத்து மகளே!
முகம் காணா மகளே!
மாதங்கள் பத்து மனதினில் சுமந்து,
கற்பனையில் பெற்ற கண்மணியே!
நான் உனக்குக் கவிதையில் எழுதும் கடிதம்’.
‘எழுதுகிறேன் ஒரு கடிதம்’ என தொடங்கி, எவருக்கும் சொல்லாத தனது தவிப்புகளை, ஏக்கங்களை, ஆதங்கங்களைத் தன் கற்பனைக் குழந்தைக்கான நாயகியின் கடிதத்தில் காவியமாகத் தீட்டியிருப்பார், அதிகம் அறியப்படாத கவிஞர் இளந்தேவன். ‘பாறையில் மலர்ந்த தாமரையே! இரவினில் எழுந்த சூரியனே!’ என தாய்மைப் பேற்றடையாத பெண்ணின் இயலாமையைக் கூறிக்கொண்டே செல்வார் கவிஞர்.
சின்னக்குயில் சித்ராவின் குரல்வடிக்கும் கண்ணீரில், திரையில் தோன்றும் கீதாவின் ஏக்கங்களும் சோகங்களும் நிறைந்த முகம் நம் கண்முன்னே விரியும். இசையில் புதுமை எதுவுமில்லை என்றாலும், தேவாவிற்கு இது புதியதொரு களம் என்பதே புதுமைதான். தன் பணியை நிறைவாகவே செய்திருப்பார் தேவா.
தான் மனதில் தேக்கிய ஆசைகளைத் தன் கற்பனை மகளிடம் சொல்லும் ஒரு தாயான கீதாவிற்காக சித்ரா பாட, புரட்சிக் கருத்துகளை அந்தக் கற்பனை மகளுக்குள் விதைக்கும் கல்கி பாத்திரத்தை ஏற்றிருந்த நடிகை சுருதிக்காக பாடியிருப்பார் அனுராதா ஸ்ரீராம். இரண்டு பெண்களும் இருவேறு துருவங்கள் என்பதைத் தன் வரிகளாலேயே நமக்குள் கடத்தியிருப்பார் இளந்தேவன்.
‘சிந்தாமணி என் கண்மணி! சிற்றாடை நீ கட்டடி.
என் மாளிகை முற்றத்திலே, பொன்னூஞ்சல் நீயாடடி”
என சராசரித் தாலாட்டாய், ஒரு சரணத்தில் சித்ரா பாட,
‘பொல்லாதது உன் பூமிதான், போராட்டம்தான் வாழ்வடி.
கொல்லாமலே கொல்வாரடி, குற்றங்கள் சொல்வாரடி’
என்று கனீர்க்குரலில் விழிப்பூட்டுவார் அனுராதா.
‘புறாவைப் போல சாந்தமாய் பண்பாடு போற்று கண்ணே’, இது கீதாவுக்காக சித்ரா. ‘வராத துன்பம் வாழ்விலே வந்தால் நீ நேரில் மோது’, இது கல்கிக்காக அனுராதா.
‘ஊமைக்கும் நோக்குகள் வேண்டுமடி
உரிமைக்குப் போரிடத் தேவையடி’
என தான் வாழும் சமூகத்தை எதிர்கொள்ள அந்தக் குழந்தைக்குச் சொல்லித் தருகிறாள் கல்கி. கல்கி குழந்தையை இப்படிக் கொஞ்சுவதாகக் கவிஞர் பாடலை முடித்திருப்பார், ‘தொடாமலே சுடும் கனல் நீயே!’
குளிர்ச்சியாய் மனதில் இறங்கி, சிந்தையைச் சுடும் பாடல். (பாடலைக் கேட்க) கேட்போம்; ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் சக உயிர் என்ற புரிதல் கொள்வோம்.
...ரதம் பயணிக்கும்
--
தொடர்புக்கு: [email protected]