ஜூன் 27, ஹெலன் கெல்லர் அவர்களின் பிறந்தநாள். பார்த்தல், கேட்டல், பேசுதல் ஆகிய 3 முக்கியத் திறன்கள் இல்லாதபோது வாழ்வதே சாதனைதான் என்று இன்றைய நிலையிலும் பலரும் நினைப்பர். இத்தனை சிக்கல்களையும் துணிச்சலாய் எதிர்கொண்டு சாதனைப் பெண்மணியாய், தன்னம்பிக்கை நாயகியாய், மாற்றுத்திறனாளிகளின் முன்னுதாரணமாய் வாழ்ந்து மறைந்த ஹெலன் கெல்லர் அம்மையாரை பெருமையோடு நினைவுகூர்கிறது உங்கள் ‘விரல்மொழியர்’.
உங்கள் மனங்களில் தனக்கென தனி இடம் பெற்ற ‘விரல்மொழியர்’, உங்கள் ஆதரவோடு மேற்கொண்டுவரும் சில தொடர் முயற்சிகள் குறித்த பெருமிதத் தருணங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.
கடந்த மார்ச் 20, 2018 தேதியிட்ட ‘தி இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான எமது இதழ் குறித்த செய்தியில் (http://tamil.thehindu.com/opinion/reporter-page/article23299340.ece), ‘தங்கள் இதழால் வெளியிடப்படும் நூல்கள் ஒருங்குறி வடிவில் வெளியிடப்பட்டால், பார்வையற்றவர்கள் பயன் பெறுவர்’ என்ற கருத்தை விரல்மொழியர் இதழின் சார்பில் எடுத்துரைத்திருந்தோம். இதனைத் தொடர்ந்து, தற்போது வெளியிடப்பட்டுள்ள, பலரது கவனத்தையும் ஈர்த்த கட்டுரைத் தொகுப்பான ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ அமேசான் கிண்டிள் தளத்தில் பார்வையற்றோர் படிக்கும் வகையில் ஒருங்குறி வடிவில் இடம்பெற்றுள்ளது. ‘தி இந்து தமிழ்’ நாளிதழுக்கு, இணையத்தில் வாசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் பார்வையற்றவர்கள் சார்பாக விரல்மொழியரின் மகிழ்ச்சியும் நன்றிகளும்.
சென்ற மே, 2018 இதழில் வெளியான ‘புதிய பாடப் புத்தகங்கள் எப்போது பிரெயிலில் கிடைக்கும்?’ என்ற கட்டுரை, பாடப் புத்தகங்களின் மாற்றத்தில் முக்கியப் பங்காற்றியவரும், கல்வியாளருமான பேரா. ச. மாடசாமி அவர்களுக்கு அனுப்பப்பட்டது.
இதழுக்கு அவர் தந்திருக்கும் பதில் இது: ‘வணக்கம். உங்கள் கடிதம் நாங்கள் பார்க்கத் தவறிய பக்கங்களைச் சரியாக எங்களுக்கு நினைவூட்டியது. பிரெயில் பாடப் புத்தகங்கள் குறித்து சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் கட்டாயம் பேசுவேன். பேசிவிட்டு உங்களுக்குத் தெரிவிக்கிறேன். அன்புடன், ச. மாடசாமி’. கல்வியாளர் மாடசாமி அவர்களுக்கு ஆயிரக்கணக்கான பார்வையற்ற மாணவர்கள் சார்பாகவும், அவர்களின் பெற்றோர் சார்பாகவும், பார்வையற்ற ஆசிரியர்கள் சார்பாகவும் உளமார்ந்த நன்றிகள்.
‘விரல்மொழியர்’, பார்வையற்றோர் எதிர்கொள்ளும் சிக்கல்களை இதழில் வெளியிடுவதோடு நின்றுவிடாமல், அவை தொடர்பாக தொடர்புடையோரிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது; மேற்கண்டவை அவற்றுள் இரண்டு. இன்னும் எங்கள் முயற்சிகள் தொடரும், உங்கள் அன்பான ஆதரவைப் போலவே!
‘உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு’