கூகுள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இணைய உலகில் தவிர்க்க முடியாத பெயராக மாறியிருக்கிறது இந்த இணைய ஜாம்பவான். 1990-களின் இறுதியில் பேச் சகோதரர்கள் இந்த கூகுளைத் துவங்குகையில் இந்த தேடுபொறி பிற்காலத்தில் ஒவ்வொருவரின் வாழ்விலும் தவிர்க்க முடியாததாக இருக்கும் என்று கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள். கூகுள், சிலிக்கான் வேலிக்குள் இருந்து சின்னாளபட்டியையும் எளிதில் கனெக்ட் செய்யும்; ஒரு நாட்டின் பிரதமரை கிரிமினல் என்று காண்பித்து இணைய உலகைத் தெறிக்கவிடவும் செய்யும்.
இப்படியாக, கடந்த 20 ஆண்டுகளாக இணைய உலகின் ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கும் இந்த கூகுள் நம் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம். அதுவும், பார்வை மாற்றுத்திறனாளிகளின் மறுமலர்ச்சியில் கூகுளுக்கு ஒரு தனி இடத்தையே ஒதுக்கிவிடலாம். பட்டன்களின் அழுத்தத்தில் வாழ்வை கடத்திக்கொண்டிருந்த பார்வையற்றோர் சமூகத்தை, தொடுதிரை என்னும் மாயாஜாலத்தால் ஆண்டிராய்டு என்னும் ஆழ்கடலுக்குள் நீந்தவைத்த பெருமையெல்லாம் இந்த சிலிக்கான் சிங்கத்தையே சாரும். இன்றும் பல பார்வையற்றவர்கள் கூகுளால்தான் ஃபோன் செய்கிறார்கள்; தங்களுக்கு வேண்டிய விடையங்களைத் தேடுகிறார்கள்; சிக்கலான இடங்களுக்கும் வழி கண்டுபிடிக்கிறார்கள்! இவையெல்லாம் கூகுள் தேடல், குரல் தேடல், குரல் தட்டச்சு இவற்றினால்தான் சாத்தியமாகி இருக்கிறது. பார்வையற்றோருக்கு உதவும் வகையிலான கூகுளின் இன்னும் சில தொழில்நுட்பங்களை இக்கட்டுரையில் உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.
கூகுள் மேப்ஸில் தமிழ் குரல் வழிகாட்டி
பள்ளிக் காலங்களில் இருந்தே சோஷியல் சைன்ஸில் வரைபடத்தைப் பார்த்தாலே மனது குஷி ஆகிவிடும். அந்த வரைபடங்கள் புரிகிறதோ புரியவில்லையோ, கண்ணை மூடிக்கொண்டு டிக் செய்துவிட்டு வந்துவிடுவோம். அந்த வரைபடத்திற்கும் முழு மதிப்பெண் கிடைத்துவிடும்.
பள்ளி வாழ்க்கையில் படித்த வரைபடங்களை நவீனமாக்கி அனைவரது கைகளிலும் தவழவிட்டது கூகுள். அதுவரை தாள்களில் மட்டும் பார்த்துப் பார்த்து சலித்துப்போன வரைபடங்கள் நம் கைப்பேசிகளில் தவழவும் மகிழ்ந்துதான் போனார்கள் நெட்டிசன்கள். இதற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என, பார்வையற்றவர்களும் கூகுள் வரைபடத்தைத் தங்கள் கைப்பேசிகளில் பாவிக்கத் துவங்கினார்கள். அதன்படியே திரைவாசிப்பானும் (Screen Reader) அவர்களுக்கு ஓரளவிற்கு ஒத்திசைவாக இருந்தது. இந்த திரைவாசிப்பானின் சில சிக்கல்களைத் தவிர்க்கும் நோக்குடனும், இதர பயனாளர்களையும் விரைவில் கூகுள் வரைபடத்தைப் பயன்படுத்த வைக்கவும் சென்ற ஆண்டு துவக்கத்தில் கூகுள் தன் வரைபடச் சேவையில் ஒரு பெரிய மாறுதலைப் புகுத்தியது. அதுதான், கூகுள் குரல் வழிகாட்டி (Google Voice Assistant). நீங்கள் செல்லவேண்டிய இடத்தைத் தேர்வு செய்துவிட்டு, எவ்வாறு அந்த இடத்திற்குச் செல்லப்போகிறீர்கள் என கூகுள் வரைபடத்தில் உள்ள நிலையைத் தேர்வு செய்துவிட்டு, ‘தொடங்குக’ பொத்தானைக் க்ளிக்கிவிட்டால் போதும். நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியை வரைபடமாகக் கொண்டுவந்து கூகுள் காண்பித்துவிடும்.
இந்த சேவையில் ஒரு குரல் வழிகாட்டியை இணைத்தால் எப்படி இருக்கும் என நினைத்த கூகுள், அதனை சென்ற ஆண்டு துவக்கத்தில் உத்தியோகப்பூர்வமாக தன் வரைபட சேவையில் களமிறக்கியது. முதலில் இந்தக் குரல் வழிகாட்டல் ஆங்கிலம் மற்றும் சில பிரபல மொழிகளுக்கு மட்டுமே கிடைத்தது. தற்போது இந்த வசதி மேம்படுத்தப்பட்டு, இந்திய மொழிகள் உட்பட சில உலக பிராந்திய மொழிகளும் இணைக்கப்பட்டிருக்கிறது. அப்படி இணைக்கப்பட்ட இந்திய மொழிகளில் தமிழும் அடக்கம் என்பதுதான் இதன் சிறப்பே.
இந்தக் குரல் வழிகாட்டலுக்கு கூகுள் தேர்ந்தெடுத்திருக்கும் மனிதக் குரல் எளிதில் புரியும்படி இருக்கிறது. இந்தக் குரலை எப்போதோ, ஏதோ ஒரு இந்திய வானொலியில் கேட்டது போன்ற சன்னமான நினைவு எனக்கு. இக்குரல் தற்போதைக்கு கூகுள் வரைபடத்தில் எந்த திசையில் செல்ல வேண்டும், எந்தப் பக்கம் திரும்ப வேண்டும், எவ்வளவு தூரம் நேரே செல்ல வேண்டும் போன்ற சின்னச்சின்ன விடையங்களுக்கு உதவி புரிகிறது. விரைவில் ஆங்கிலக் குரல் வழிகாட்டலைப் போலவே தெருப் பெயர்கள், சாலையின் பெயர்கள், லேண்ட் மார்க்குகள் போன்றவற்றையும் தமிழ் குரல் வழிகாட்டலில் கூகுள் உட்புகுத்தும் என்று நம்புகிறேன்.
எப்படி இந்தக் குரல் வழிகாட்டலைச் செயல்படுத்தலாம்? முதலில் உங்கள் கூகுள் வரைபடத்திற்குள் நுழைந்து ‘மெனுவை’ செலெக்ட் செய்து, ‘செட்டிங்ஸ்’ செல்லுங்கள். அங்கு வழிகாட்டலுக்கான குரல் தேர்வில் தமிழைத் தேர்வு செய்து உறுதிபடுத்திவிட்டால் போதும். உங்கள் கூகுள் வரைபடக் குரல் வழிகாட்டல் தமிழில் செயல்படத் துவங்கிவிடும்.
கூகுள் லென்ஸ்
திரை வாசிப்பான்கள் திக்கெட்டும் பரவினாலும், பார்வையற்றோர் சமூகத்திற்கு சில சிக்கல்கள் தொடரத்தான் செய்தன. புகைப்படங்களில் உள்ள எழுத்துக்களை படிப்பது, அந்தப் புகைப்படத்தில் உள்ள உருவம் பற்றிய விவரங்களை அறிந்துகொள்வது, இன்னும் ஒரு படி மேலே போய், கணினிகளிலும் கைப்பேசிகளிலும் தமிழ் தவழத் துவங்கியபோது ஒருங்குறி (Unicode) வடிவில் இல்லாத எழுத்துக்களையும், தமிழ் PDF கோப்புகளையும் படிப்பது என ஏராளமான சிக்கல்களைத் திரைவாசிப்பான்களின் பயன்பாட்டில் பார்வையற்றவர்கள் எதிர்கொண்டார்கள்.
இந்த சிக்கல்களைக் களைய முதலில் ஆங்கிலத்திற்கென ‘கர்ஸ்வெல்’ (Kurzweil) களம் இறங்கியது. இம்மென்பொருள்தான் எழுத்துணரிக்கான (OCR) துவக்கப் புள்ளியாக அமைந்தது. இதனைக் கொண்டு பல மொழிகளில் எழுத்துணரிகள் வடிவமைக்கப்பட்டன; அதில் தமிழும் அடக்கம். என்னதான் எழுத்துணரிகளின் பயன்கள் மெச்சத்தக்க அளவுக்கு இருந்தாலும், தமிழை இன்னும் முழுமையாக எழுத்துணரியை வைத்துப் பயன்படுத்த முடியவில்லை என்பதுதான் பார்வையற்ற சமூகத்தின் பெரும் குறையாய் இருக்கிறது. ‘இந்த எழுத்துணரிகளிலும் நான்தான்டா எஜமான்’ என்பது போல, கடந்த 2015-ஆம் ஆண்டு தமிழுக்கு ஒரு தரமான எழுத்துணரியை கொண்டு வந்தது கூகுள்.
‘கூகுள் லென்ஸ்’ எனச் சொல்லிவிட்டு, இவன் எழுத்துணரி புராணம் பாடிக் கொண்டிருக்கிறானே என்றுதானே மண்டைக்குள் நியூரான்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன? எழுத்துணரியை அறிந்தால்தான் கூகுள் லென்ஸின் சூட்சுமங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
ஆண்டிராய்டு திறன் பேசிக்கான எழுத்துணரிக்காக புற்றீசல் போல செயலிகள் ‘பிளே ஸ்டோரில்’ கொட்டிக் கிடந்தாலும், தமிழுக்கென ஒரு தரமான செயலி கூட இல்லை என்பதுதான் வருத்தமான விடையம்; இதில், ‘ஸ்மார்ட் லென்ஸ்’, ‘ஐ-டீ’ போன்ற செயலிகள் விதிவிலக்கு. ‘நான் எல்லா வசதிகளையும் இலவசமாகவே கொடுக்கிறேன் பாஸ்’ என காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு சில நாட்களுக்கு முன்பு இந்தத் திறன் பேசி செயலிக்குள் குதித்திருக்கிறது ‘கூகுள் லென்ஸ்’.
கூகுள் லென்ஸை வைத்து என்னவெல்லாம் செய்யலாம்?
ஒரு புகைப்படத்தில் உள்ள எழுத்துக்களை படிக்கலாம்; புகைப்படத்தில் இந்த உருவம்தான் இடம்பெற்றிருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக, மிக பிரபலமான ஒருவரின் புகைப்படத்தைத் திறக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவரின் பெயருடன் அந்தப் புகைப்படத்தைச் சொல்லிவிடுகிறது நம் திரைவாசிப்பான். காரணம், கூகுள் லென்ஸ் கூகுள் தேடலுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் கூகுள் லென்ஸ் எல்லாவற்றிலுமிருந்து தனித்துத் தெரிகிறது.
எப்படி இதை செயல்படுத்தலாம்?
இதற்கு நீங்கள் தனியாக எந்த ஒரு செயலியையும் உங்கள் கைப்பேசியில் நிறுவத் தேவை இல்லை. உங்கள் திறன் பேசியில் உள்ள ‘கூகுள் ஃபோட்டோஸ்’ செயலியில்தான் இந்த வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது. முதலில் கூகுள் ஃபோட்டோஸ் செயலிக்குள் நுழைந்து, ஒரு புகைப்படத்தைத் திறந்துகொள்ளுங்கள். பின்னர், உங்கள் ஆள்காட்டி விரலைக் கொண்டு வலமிருந்து இடமாக ஒரு முறை ஸ்வைப் செய்துவிட்டு, மீண்டும் இடதில் இருந்து வலது நோக்கி லென்ஸ் என்று உங்கள் திரைவாசிப்பான் சொல்லும் வரை ஸ்வைப் செய்துகொண்டு வாருங்கள். பிறகு, அந்த லென்ஸ் ஐக்கானைத் திறந்து, ‘கெட் ஸ்டார்டட்’ என்பதை க்ளிக் செய்தால் உங்கள் கூகுள் லென்ஸ் செயல்படத் துவங்கிவிடும்.
சரி, உங்களுக்குப் பிடித்தமான புகைப்படங்களை எவ்வாறு இதில் திறந்து பார்ப்பது? அடுத்த முறை நீங்கள் கூகுள் ஃபோட்டோஸ் செயலிக்குள் நுழைந்த பின், ‘நேவிகேஷன் மெனு’வை கண்டறிந்து க்ளிக்குங்கள். பின்னர் அங்கு உள்ள ‘டிவைஸ் ஃபோல்டர்’ ஐக்கானை க்ளிக்கி, நீங்கள் புகைப்படம் வைத்திருக்கும் ஃபோல்டரை கண்டறிந்து, அதனுள் உள்ள புகைப்படம் ஒன்றின் மீது க்ளிக்கி திறந்துகொள்ளுங்கள். பின்னர், ஆள்காட்டி விரல் கொண்டு ஸ்வைப் செய்து, லென்ஸ் ஐக்கானை க்ளிக் செய்து நீங்கள் திறந்த புகைப்படத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். இத்தனை விடையங்களுக்கும் ஓரளவிற்கு வேகமாக இணைய இணைப்பு தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒலிப்பான் (Synthesizer)
திரும்பும் திசையெல்லாம் ஒலிப்பான் என்றதும் எலக்குவன்ஸின் ஏகாதிபத்தியம்தான். ஆங்கிலத்தை அழகாக நாக்கைச் சுழற்றிச் சுழற்றி வாசித்துக் காண்பித்ததும் சற்றே வியப்புடன் தொழில்நுட்ப உலகைக் கவனித்தார்கள் பார்வையற்றவர்கள். எலக்குவன்ஸ் கணினியைத் தாண்டி கீபேடு கைப்பேசிகளிலும், தொடுதிரை கைப்பேசிகளிலும் தவழவும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போனார்கள்.
எலக்குவன்ஸின் ஏகாதிபத்தியத்தைத் தமிழ் பேசும் பார்வையற்றவர்களிடையே சற்றே அடக்கி வைத்தது ‘ஈ-ஸ்பீக்’ என்னும் இங்கிலாந்து எந்திர மனிதன்தான். அதுவரை ஆங்கிலத்தை மட்டும் அழகாக வாசித்துக்கொண்டிருந்த திரைவாசிப்பான்கள், தமிழையும் எந்திரத்தனமாக வாசிக்கத் தொடங்கின. இப்போதும் தமிழுக்குச் சிறந்த ஒலிப்பான் என்றால் அது ‘ஈ-ஸ்பீக்’ என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. தமிழுக்கு மனிதக் குரல் போல ஒலிப்பான் உருவாக்கவேண்டும் என்றால் அது கூகுளால் மட்டுமே சாத்தியம் என்று நம்பியவர்களுள் நானும் ஒருவன். அவற்றிற்கெல்லாம் மொத்தமாய் இப்போது தன் தமிழ் குரலால் பதில் சொல்லி இருக்கிறது கூகுள்.
பார்வையற்றோர் சமூகம் ஊகித்தது போலவே, தமிழுக்கு ஒரு தரமான குரலை வழங்க முயற்சித்திருக்கிறது கூகுள். கூகுளின் இந்த முயற்சிக்கு பார்வையற்றோர் மத்தியில் பலத்த வரவேற்பைக் காணமுடிகிறது. உண்மையில் இக்குரல் ஒரு மனிதக் குரல் போலவேதான் எழுத்துக்களை வாசித்துக் காண்பிக்கிறது. ஆனாலும், குரலில் சற்றே சுணக்கம் தெரிகிறது. இந்தக் குரல் தமிழை தெளிவாகத்தான் உச்சரிக்கிறது; அதன் மெதுவான செயல்பாடுகள்தான் இங்கே பலருக்கும் பிரச்சனையாக உள்ளது.
கூகுள் தனது புதிய கூகுள் செயலி மேம்படுத்தலில்தான் இந்தக் குரல் வசதியை சோதனை முறையில் பரிசோதித்து பார்த்துக்கொண்டிருக்கிறது. இன்னும் கூகுளின் பிரத்தியேக ஒலிப்பானில் இக்குரல் சேர்க்கப்படவில்லை என்பதையும் பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டும். விரைவில் கூகுளின் உற்சாகமான தமிழ் குரலுடன் மேம்படுத்தப்பட்ட கூகுள் ஒலிப்பான் செயலி கிடைக்கும் என நம்புவோம்.
சரி, இந்த தமிழ் குரலை எப்படி உங்கள் திறன் பேசியில் பாவிக்கலாம்? சிம்பிள்! உங்கள் திறன் பேசியில் உள்ள பிரத்தியேக செட்டிங்ஸில் ‘லாங்குவேஜ் அண்ட் இன்புட்’டுக்குள் சென்று, உங்கள் திறன் பேசியின் மொழியை தமிழுக்கு முழுவதும் மாற்றிவிட்டு, ‘அக்ஸசபிலிட்டி’க்கு சென்று ‘டெக்ஸ்ட் டூ ஸ்பீச்’சுக்குள் சென்று கூகுள் ஒலிப்பானை தேர்வு செய்தால் உங்கள் திறன் பேசியில் கூகுளின் தமிழ் குரல் செயல்பட துவங்கிவிடும். இக்குரல் சில செயலிகளில் உள்ள தமிழை மட்டுமே இப்போதைக்கு நமக்கு வாசித்துக் காண்பிக்கிறது. மற்றபடி இக்குரல் திறன் பேசி முழு பயன்பாட்டிற்கும் 80 சதவிகிதம் அளவுக்கு ஒத்திசைகிறது.
எல்லாம் சரிதான். இப்போதெல்லாம் தமிழ் ஒலிப்பானுக்கு உழைப்பவர்கள் ஆங்கிலத்தை அனாமத்தாக விட்டுவிடுவதுதான் சற்றே குறையாகப் படுகிறது. சமீபத்தில் வெளியான ‘வாணி’ குரல் முதல் இப்போது பிறந்திருக்கும் ‘கூகுள் தமிழ் குரல்’ வரை இந்நிலைதான் நீடிக்கிறது. சற்று ஆங்கில வாசிப்பிலும் இக்குரல்களுக்கு ஏற்ற கோடிங்குகளையும் கூகுள் சேர்க்கவேண்டும்.
செயற்கை நுண்ணறிவில் கூகுள் ஸ்பீக்கர்கள்
இன்று உலகில் எங்கு திரும்பினாலும் ‘AI’-யின் ஆதிக்கம்தான் கொடிகட்டிப் பறக்கிறது. அந்த ‘AI’-க்கும் நம்மவர்கள் செயற்கை நுண்ணறிவு என தமிழில் பெயர்சூட்டித் தொழில்நுட்ப உலகை அசத்திக் கொண்டிருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவை மிக எளிதாக விளக்குவதென்றால், ஒரு மனிதன் தன் அன்றாட வாழ்வில் செய்யும் அனைத்து விடையங்களையும் எந்திரமே மனிதனுக்குச் செய்து கொடுத்துவிடும். துணி துவைப்பதில் இருந்து குழந்தைக்குத் தாலாட்டு பாடுவது வரை எல்லாவற்றையும் அந்த எந்திரன் பார்த்துக்கொள்வார். இந்த செயற்கை நுண்ணறிவில் மிக உன்னிப்பாக கவனம் செலுத்தி வரும் நிறுவனங்களான கூகுள், ஆப்பிள், அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்றவை தங்களது எதிர்காலமே இந்த செயற்கை நுண்ணறிவுக்குள்தான் புதைந்து கிடக்கிறது என தன் செயல்பாடுகளின் வாயிலாகத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த செயற்கை நுண்ணறிவு திறன்பேசிகளில் தவழ்ந்த காலம் போய், உங்கள் வீட்டு ஸ்பீக்கர்களிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருப்பதுதான் இப்போதைய இதன் டிரெண்ட் எனலாம்.
செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு வெளியான முதல் ஸ்பீக்கர் அமேசானுடையது. அந்த ஸ்பீக்கருக்கு ‘அலெக்ஸா’ என பெயர் சூட்டி மகிழ்ந்தது அமேசான். அலெக்ஸாவின் அலை இந்தியர்களையும் விட்டுவைக்கவில்லை. 4000 ரூபாய்க்கு அலெக்ஸா கிடைக்கவும் இந்திய நெட்டிசன்கள் மகிழ்ந்துதான் போனார்கள். ‘எல்லா மகிழ்ச்சியும் கொஞ்ச நாளைக்கித்தான் பாஸ்’ என கூகுள் நினைத்திருக்ககூடும் போல. ‘இதோ நானும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் வரிசையில் இந்தியாவிற்குள் வந்துட்டேன்’ என கூகுள் தனது இரண்டு ‘AI’ ஸ்பீக்கர்களை தொழில்நுட்பச் சந்தையில் களமிறக்கி இருக்கிறது.
அந்த ஸ்பீக்கர்களுக்கு அலெக்ஸா மாதிரியெல்லாம் சிறப்புப் பெயர் எதையும் சூட்டவில்லை கூகுள். அந்த இரண்டு ஸ்பீக்கர்களுக்கும் கூகுள் மினி, கூகுள் ஹோம் என மிக எளிமையாக பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அப்படி இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களில் என்னதான் ஸ்பெஷல்?
மிக எளிதாகச் சொல்ல வேண்டும் எனில், இந்த ஸ்பீக்கர்கள்தான் உங்கள் வீட்டை ஆளப்போகும் எஜமானன். உங்கள் வீட்டில் உள்ள ஸ்மார்ட் சாதனங்களுடன் இந்த ஸ்பீக்கர்களை ‘வைஃபை’ கொண்டு இணைத்துவிட்டு, அந்த சாதனங்களை உங்கள் குரல் கட்டளை கொண்டு இயக்கிவிடுவதுதான் இதன் சிறப்பு. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன். உங்கள் வீட்டு ஸ்மார்ட் டீவியுடன் இந்த ஸ்பீக்கரை இணைத்துவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். இப்பொழுது நீங்கள் வீட்டில் நுழைந்தவுடன் அந்த ஸ்பீக்கரிடம், “ஹே கூகுள், ஸ்விட்ச் ஆன் த டீவி” என்று சொன்னால் போதும். உடனே இந்த ஸ்பீக்கர் உங்கள் கட்டளையைச் செயல்படுத்தும். இந்தக் கட்டளை மட்டும் இல்லை, நீங்கள் ஹாயாக பெட்டில் சாய்ந்துகொண்டு உங்கள் வீட்டின் வெளியே நிலவும் காலநிலையைக் கேட்டாலும் சரி, அருகில் உள்ள சிறந்த அசைவ உணவகங்களைக் கேட்டாலும் சரி. எல்லாவற்றிற்கும் நொடிப்பொழுதில் விடை வைத்திருக்கின்றன இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள். பிறகென்ன? இனி தினமும் காலைல ‘புத்தம் புதுபூமி வேண்டும்’ பாட்ட அலாரமா கூகுள்ட்ட வைக்கச் சொல்லிட்டு நைட்டு நிம்மதியா தூங்குவோம்.
சரி, இந்த வசதி எல்லாமே அமேசான் அலெக்ஸாவில் அப்படியே இருக்கிறது. பிறகு ஏன் கூகுளின் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை வாங்கணும்? இதற்கான விடை ஒன்றுதான். அமேசான் ஸ்பீக்கர்கள் சில குரல் கட்டளைகளைச் சிறப்பாகச் செயல்படுத்துவதில்லை. மேலும் அவற்றிற்கு நம் குரலைப் புரிந்துகொள்ளும் துல்லியத் தன்மை இன்னும் சிறப்பாக வரவேண்டி இருக்கிறது. ஆனால், கூகுள் ஹோம் இவற்றிற்கெல்லாம் மொத்தமாக விடை வைத்திருக்கிறது. கூகுள் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் சிறப்பே குரல் உதவி சேவையை கூகுள் தனது தேடுபொறியுடன் இணைத்திருக்கிறது என்பதுதான். வழிகாட்டல் சேவையையும், இசை கேட்பதற்கான சேவையையும் கூகுள் தனது பிரத்தியேக செயலிகளுடன் இணைத்திருக்கிறது. குரல் துல்லியத் தன்மையிலும் அலெக்ஸாவைவிட கூகுள்தான் சிறப்பாக இருக்கிறது என நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள்.
எப்படி இந்த கூகுள் ஸ்பீக்கர்களை வாங்குவது?
கூகுள் தற்போதைக்கு கூகுள் மினி, கூகுள் ஹோம் என இரண்டு வேரியங்களில் இந்த ஸ்பீக்கரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. கூகுள் மினி 4999 ரூபாய்க்கும், கூகுள் ஹோம் 9999 ரூபாய்க்கும் ‘ஃபிலிப்கார்ட்’ தளத்தில் கிடைக்கிறது. இவை இரண்டிற்குமான வித்தியாசம் ஒலி அளவும், ஸ்பீக்கர் உயரமும்தான். மற்றபடி இவை இரண்டிலுமே ஒரே வசதியைத்தான் கொடுத்திருக்கிறது கூகுள். பெரிய வீட்டிலோ அப்பார்ட்மெண்டிலோ வசிப்பவர்கள் கூகுள் ஹோமைத் தங்களது சாய்ஸாகக் கொள்ளலாம்; சிறிய அறைகளில் வசிப்பவர்கள் கூகுள் மினியைத் தங்களது சாய்ஸாகக் கொள்ளலாம். உடனே ஃபிலிப்கார்ட்டுக்குப் போய், சுடச்சுட ஒரு ஸ்பீக்கர ஆர்டர் செஞ்சு, ‘ஹே கூகுள்! அலெக்ஸா காலிங் யூ?’ எனச் சொல்லி, கூகுளையும் அலெக்ஸாவையும் வம்பிழுத்துவிடுங்க பாஸ்.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பார்க்கையில் எனக்கு வடிவேலுவின் இந்த டயலாக்தான் நினைவிற்கு வருகிறது, ‘கேளுடா! யார்ட்ட கேக்குற? அண்ணன்ட்டதான கேக்குற. கேளுடா கேளு’. இந்தக் கட்டுரையை வாசித்ததும் உங்களை யாரோ ஒருவர் தினமும் சுற்றிச் சுற்றிக் கவனித்து கொண்டிருப்பது போன்ற உணர்வு உங்களுக்குள் தோன்றி இருக்கும்; அந்த உணர்விற்குப் பெயர்தான் செயற்கை நுண்ணறிவு. மொத்தத்தில் நமது பிரைவசி அனைத்தையும் இணைய சர்வர்களுக்குள் அடமானம் வைக்கப்போகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை. நமது பிரைவசியில் தலையிடப்போகும் இணைய நிறுவனங்கள் அதற்கான பாதுகாப்பைத் தருமா என்பதுதான் உலக மக்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது!
--
தொடர்புக்கு: [email protected]