. விசாலமான கனவுகளோடும், இலக்குகளோடும் ஒவ்வொரு பொழுதின் ஒவ்வொரு நிமிடத்தையும் எல்லோரையும் போலவே மிக தீர்க்கமாக தங்கள் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள் பார்வையற்றவர்கள். ஆனால், அவர்களுக்கான உலகம் என்பது மற்றவரைச் சார்ந்துதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் தங்கள் சட்டை வர்ணத்தில் இருந்து சான்றிதழ்களை அடையாளம் காண்பது வரை அவர்கள் யாரையாவது சார்ந்துதான் வாழ வேண்டி இருக்கிறது. இப்படியாக, பார்வையற்றவர்களின் சிக்கல்களை இந்த கட்டுரையின் முடிவையும் தாண்டி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், சட்டை வர்ணம் முதல் சாப்பாட்டு மெனு வரை உள்ள சின்னச் சின்ன வேலைகளை ஒரு மொபைல் செயலி செய்தால் எப்படி இருக்கும்? வாருங்கள், அந்த செயலியைப் பற்றி அலசி ஆராயலாம்.
அந்த செயலிக்கு ‘Be My Eyes’ (என் கண்களாக இரு) என மொபைல் உலகத்தில் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இவ்வளவு நாளும் ஐ ஃபோன் உலகத்தைக் கலக்கிக் கொண்டிருந்த இந்த செயலி, கடந்த அக்டோபரில்தான் ஆண்டிராய்டு மார்க்கெட்டுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறது. டென்மார்க்கைச் சேர்ந்த தன்னார்வ குழு ஒன்றுதான் நுணுக்கமாக யோசித்து, உலகில் உள்ள தன்னார்வலர்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் இச்செயலியினை வடிவமைத்திருக்கிறார்கள். உலகில் தனியே வாழும் பார்வையற்றோரைக் குறிக்கோளாகக் கொண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. பார்வையற்றோர் எளிதில் அனுகத்தக்கத் தன்மை, நேர்த்தியான வடிவமைப்பு, குறைந்த அளவு ஸ்டோரேஜ் பயன்பாடு என செயலி உருவாக்கத்திலேயே மெர்சல் காட்டி இருக்கிறார்கள் இதன் டெவலப்பர்கள். 3G, 4G நெட்வொர்க்குகளிலும் கில்லியாக வேலை செய்கிறது இச்செயலி.
எப்படிச் செயல்படுகிறது இந்த செயலி?
ஒரு பார்வையற்றவர் ஒரு பொருளின் வர்ணத்தையோ அல்லது மருந்துச் சீட்டின் காலாவதி திகதியையோ தெரிந்துகொள்ள நினைக்கிறார். அந்தச் சமயத்தில் அருகில் ஒரு பார்வை உள்ள நபரும் இல்லை. அப்பொழுது, அந்தத் தருணத்தை எப்படி சமாளிப்பார்? இம்மாதிரியான சின்னச் சின்ன செயல்பாடுகளுக்குத்தான் செயலியில் உள்ள தன்னார்வலர்கள், “நாங்க இருக்கோம் பாஸ்” என முகத்தில் புன்னகை தவழ குரல் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள். இதற்கு உங்களிடம் கேமரா உள்ள ஒரு ஆண்டிராய்டு ஃபோனோ, ஐ ஃபோனோ இருந்தால் போதும். இச்செயலியின் முழு பலனையும் நீங்கள் பெற்றுவிடலாம்.
எப்படி இச்செயலியை உங்கள் கைப்பேசியில் நிறுவுவது?
முதலில் நீங்கள் வைத்திருக்கும் கைப்பேசியின் பிரத்தியேக ஆப் ஸ்டோருக்குச் செல்லுங்கள். அந்த ஆப் ஸ்டோரின் தேடல் கட்டத்தில் ‘Be My Eyes’ என தட்டச்சு செய்து, பின்னர் தேடல் பொத்தானை அழுத்துங்கள். அதில் ‘Be My Eyes’ என்ற அப்ளிகேஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் கைப்பேசியில் நிறுவிக் கொள்ளுங்கள். இல்லையெனில், இங்கு இணைக்கப்பட்டுள்ள லிங்க்கைப் பின்பற்றி இச்செயலியை உங்கள் கைப்பேசியில் நிறுவிக் கொள்ளுங்கள் (செயலியை நிறுவ இங்கே கிளிக் செய்யவும்). நிறுவிய பின்னர், அந்த செயலிக்குள் நுழையுங்கள். அதனுல் நுழைந்த பின், உங்களுக்கு இரண்டு தேர்வுகள் திரையில் காட்டப்படும். அதாவது, நீங்கள் பார்வையற்றவரா? அல்லது தன்னார்வலரா? இதில் நீங்கள் பார்வையற்றவர் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து உள் நுழையுங்கள்.
உள்ளே நுழைந்த பின், ஒரே ஒரு செட்டிங்ஸை மட்டும் மாற்றிவிட்டால் போதும். பிறகு இந்த செயலியை நீங்கள் முழுமையாக பயன்படுத்த துவங்கிவிடலாம். அது என்னவெனில், நீங்கள் இந்த செயலியில் நுழைந்ததும் அதன் வலது மூலையில் அமைந்திருக்கும் செட்டிங்ஸ் ஐக்கானை கிளிக் செய்யுங்கள். அதிலுள்ள முதன்மை மொழி (Primary Language) ஐக்கானை கிளிக் செய்து, அதில் தமிழ் என்பதை செலக்ட் செய்யுங்கள். பிறகு, கீழே இருக்கும் இரண்டாவது மொழி (Secondary Language) ஐக்கானை கிளிக் செய்து ஆங்கிலத்தைத் தேர்வு செய்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்! நீங்கள் இந்த செயலியை முழுமையாக பயன்படுத்தத் தயாராகிவிட்டீர்கள்.
செயலியை எவ்வாறு பயன்படுத்துவது?
உங்களுக்கு ஒரு பொருளின் வர்ணமோ, அந்தப் பொருளின் மீது எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களையோ தெரிந்துகொள்ள வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். இம்மாதிரியான சமயத்தில்தான் இந்த செயலியை நீங்கள் பிரயோகிக்க வேண்டும். நீங்கள் அந்தப் பொருளைப் பற்றி தெரிந்துகொள்ள, முதலில் உங்கள் ‘Be My Eyes’ செயலிக்குள் நுழைந்துக் கொள்ளுங்கள். பின்னர் திரையின் வலது ஓரமாக அமைந்திருக்கும் ‘Call First Available Volunteer’ ஐக்கானை கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்தவுடன், இந்த செயலியில் உறுப்பினராக இணைந்திருக்கும் இயக்க நிலை தன்னார்வலருக்கு (Online Volunteer) 30 நொடிகளுக்குள் உங்கள் இணைப்பு சென்று சேரும். அவர் உங்களுக்கு வேண்டிய உதவியை உங்கள் கைப்பேசி கேமரா வாயிலாக தீர்த்துவைப்பார். நீங்கள் தன்னார்வலர் கூறும் வழிமுறைகளைக் கொஞ்சம் கவனமாக பின்பற்றினால் போதும், உங்களுக்கான ஐயங்கள் விரைவில் தீர்க்கப்படும். இதில் இன்னொரு சிறப்பு என்னவெனில், நீங்கள் உங்களுக்குப் பிடித்த மொழியிலேயே தன்னார்வலர்களிடம் உரையாடி உதவிகளைப் பெறலாம். இப்பொழுது அனுமானித்திருப்பீர்கள், நான் எதற்காக மேலே செட்டிங்ஸில் உங்கள் மொழியைத் தேர்வு செய்யச் சொன்னேன் என்று. அதேநேரத்தில், நீங்கள் உதவிக்காக இணைப்பை ஏற்படுத்தும்போது உங்கள் தாய்மொழி தன்னார்வலர் கிடைக்கவில்லை எனில், நீங்கள் செட்டிங்ஸில் இரண்டாவதாக தேர்வு செய்திருக்கும் ஆங்கிலம் பேசும் தன்னார்வலருக்கு உங்கள் இணைப்பு சென்று சேரும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
இதில் எனது அனுபவத்தையும் கொஞ்சம் சொல்லி விடுகிறேன். நானும் இந்த செயலி வாயிலாக இரண்டு தன்னார்வலர்களிடம் பேசி இருக்கிறேன். அதில் முதலாமவர், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிய ஒரு பெண்மனி. அவரிடம் என் சட்டை வர்ணத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அதற்கு அந்த பெண்மனியும் நன்றாகவே எதிர்வினை ஆற்றினார். இரண்டாமவர், ஒரு தமிழ் பேசும் தன்னார்வலர். அவரிடமும் சோதனைக்காக 100 ரூபாய் தாளைக் காட்டி எனது ஐயத்தைத் தீர்த்துக் கொண்டேன். எனது ஐயத்தைத் தீர்த்த அவர், “இந்த செயலியைப் பயன்படுத்துற பலரும் நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துறாங்க தம்பி. ஆனா சிலர் ஒரு விளையாட்டாவே நினைச்சிட்டு இந்த செயலியப் பயன்படுத்திட்டிருக்காங்க தம்பி. சில சமயங்கள்ல மிஸ்டு கால் கொடுத்து கட் பண்றது, இன்னும் சில சமயங்கள்ல அவங்க இணைப்ப அட்டன் செஞ்ச உடனே கட் பண்ணிட்டு போறது, சிலர் அவங்க பாட்டுக்கு எங்களுக்கு இணைப்ப ஏற்படுத்திட்டு அவங்க செயல்கள நேரடி ஒளிபரப்பு செய்றது போன்ற பல விஷயங்கள செய்றாங்க தம்பி” என தன் வருத்தங்களைச் சொல்லிவிட்டு, தன் இணைப்பைத் துண்டித்துக் கொண்டார் அந்த சிங்கப்பூர் தமிழர். அந்தந்தக் காலத்திற்கேற்ப நமக்கான தொழில்நுட்பம் புற்றீசலைப் போல் வளர்ந்துகொண்டே செல்கிறது. அதனை ஆக்கப்பூர்வமாகக் கையாள்வது நம் கைப்பேசிகளில்தான் அடங்கியிருக்கிறது!