“ஒருமுறை நான் பார்வையற்றவர்களுக்கு எதிராகச் சதுரங்கம் விளையாட நேர்ந்தது. அப்போது எனக்கு அவர்கள் பார்வையற்றவர்கள் என்ற எண்ணமே தோன்றவில்லை. என்னைப் போலவே அவர்கள் முழு கவனத்துடன் சதுரங்கக் காய்களை நகர்த்தினார்கள். சதுரங்கப் பலகையின் முன் பார்வையுள்ளவர், பார்வையற்றவர் என்ற வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை” - இந்தியாவின் பிரபல சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் கூறிய கருத்துகள் இவை.
இப்படி சதுரங்கம் விளையாட கண்கள் தேவையில்லை என உலகிற்கு அழுத்தமாக எடுத்துரைப்பவர் சாருதத்தா ஜாதவ். சாரு 13 வயதில் பார்வையை இழந்தவர். தற்போது இவர் இந்தியாவின் மிக முக்கியமான தகவல் தொழில்நுட்ப நிறுவனமான TCS-இல் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறார். இந்தியாவில் உள்ள பார்வையற்றவர்களில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் ஒரே நபர் இவர்தான். இது மட்டும்தான் இவரது சாதனை என நினைத்துவிடாதீர்கள்.
இவர் 6 உலக வாகையர் போட்டிகளில் (Championship) இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கிறார். 2 பார்வையற்றோருக்கான ஒலிம்பியாட்களிலும் கலந்துகொண்டிருக்கிறார். 5 முறை தேசிய சதுரங்க வாகையராக முடிசூடியிருக்கிறார். 28 ஆண்டுகளாக பார்வையற்றோருக்கான சதுரங்கத் துறையில் முக்கிய இடத்தில் இருக்கிறார்.
‘சதுரங்கம் என்பது மூளையின் திறன் கொண்டு விளையாடப்படும் விளையாட்டு’ என கூறும் சாரு, பார்வையற்றோரிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை இது முழுமையாகப் போக்கிவிடும் என்கிறார். தான் சார்ந்திருக்கும் பார்வையற்றோருக்கான சதுரங்கத்திற்காக இவர் பல புதுமையான, முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
டாக் 64
பார்வையற்றோரின் சதுரங்கத் திறனை வளர்த்திட, இவர் ‘டாக் 64’ (Talk 64) என்ற பேசும் தி்றன் பெற்ற சதுரங்கம் விளையாடும் மென்பொருளை உருவாக்கியுள்ளார்.
ரேடியோ செஸ்
உலக அளவில் பார்வையற்றோருக்கான சதுரங்கத்திற்கு என முதல் இணைய வானொலியை சாருதத்தா நிறுவியுள்ளார். ‘Radio Chess’ என்ற பெயரிலான இந்த இணைய வானொலி 2017-இல் நடைபெற்ற ஆசிய பார்வையற்றோருக்கான சதுரங்க வாகையர் போட்டியில் தொடங்கிவைக்கப்பட்டது.
டெய்சி வடிவில் சதுரங்கப் புத்தகம்
இவர் உலகின் முதல் டெய்சி (DAISY) வடிவிலான சதுரங்கப் புத்தகத்தை 2007-இல் தயாரித்து வெளியிட்டார் (டெய்சி என்பது பார்வையற்றோர் எளிதில் படிக்க உதவும் ஒரு கோப்பு வகை). இந்தப் புத்தகத்தைப் பார்வையற்றவர்கள் ஒலி வடிவிலும், வரி வடிவிலும் படித்துக்கொள்ளலாம். இதன் மூலம் பார்வையற்றோருக்கு ஏற்ற சதுரங்கம் தொடர்பான பேசும் டிஜிட்டல் புத்தகத்தைக் கொண்ட முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
இவை தவிர, சாரு பார்வையற்றோருக்கான சதுரங்கம் தொடர்பாக 35-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். ஆர்வமுள்ள பல பார்வையற்றவர்களுக்கு தன் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார்.
இவர் TCS-இலும் நிறுவனம் முழுமையும் எல்லோரும் அணுகும் வகையில் இருக்கவேண்டும் (Institutionalize Accessibility) என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இவர் தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய பிரிவுகளில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். 2006-இல் சிறந்த மாற்றுத்திறனாளி பணியாளருக்கான தேசிய விருதினை அப்போதைய குடியரசுத் தலைவர் மறைந்த திரு. அப்துல் கலாம் அவர்களிடம் பெற்றிருக்கிறார்.
இவர் அகில இந்திய பார்வையற்றோர் சதுரங்கக் கூட்டமைப்பின் (All India Chess Federation for the Blind - AICFB) தலைவராக இருக்கிறார். AICFB பார்வையற்றோருக்கான சதுரங்கத்தைச் சர்வதேச அளவில் ஒருங்கிணைத்து, உலகம் முழுமைக்குமான வழிகாட்டியாகத் திகழ்கிறது. டிசம்பர் 2003-இல் முதல் ஆசிய சதுரங்க வாகையர் போட்டியை இவ்வமைப்பு இந்தியாவில் நடத்தியது. AICFB-யின் பங்களிப்பைக் கண்டு வியந்த பார்வையற்றோருக்கான சர்வதேச சதுரங்கச் சங்கம் (International Braille Chess Association — ICBA) சாருதத்தா அவர்களை தனது நிர்வாகக் குழு உறுப்பினராக்கிப் பெருமைப்படுத்தியது.
ஒரு நேர்காணலில் சாரு இப்படிச் சொல்கிறார், “பார்வையற்றவர்களைப் பார்வையுள்ளவரோடு சமமாக எதிர்கொள்ள வைக்கும் ஒரே விளையாட்டு சதுரங்கம் மட்டுமே”.
ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் வளர்ந்த ஒரு சிறுவன் 13 வயதில் பார்வையை இழந்து, வறுமையில் உழன்று, தந்தையின் நிலையில்லா வேலையால் துவண்டு வளர்ந்தாலும் இன்று ஒரு விளையாட்டின் தேசிய வாகையராக உயர்ந்திருக்கிறார் என்பது சாதாரணமானதல்ல. இவரது சாதனைகள் பிறருக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவதோடு, தன்னை ஒத்த பிறருக்கு உதவ வேண்டும் என்ற சமுதாயக் கடமையையும் எடுத்துக்காட்டுகிறது.
சாருதத்தா ஜாதவ் ஒரு தேசிய வாகையர் என்ற பெருமைக்குரியவர் என்றாலும், பல பார்வையற்றவர்களுக்குச் சதுரங்கத்தின் மூலம் தன்னம்பிக்கை ஊட்டும் வழிகாட்டியாகத் திகழ்கிறார் என்ற பெருமை ஈடு இணையற்றது.
--
(கட்டுரை மார்ச் 2018-க்கான ‘White Print’ ஆங்கில பிரெயில் மாத இதழில் இடம்பெற்றது).
தமிழ் வடிவம்: ரா. பாலகணேசன்