அனைவரும் மதிப்போடு வாழவேண்டும் என்றால் உணவும், உடையும், இருக்க இடமும் வேண்டும். இந்த அடிப்படை தேவைகளைச் சொந்தமாக உழைத்து, அதன்மூலமாகக் கிடைக்கும் பணத்தால் அடைதல் வேண்டும். நாமும் இந்த அடிப்படைத் தேவைகளுக்காகத்தான் போராடுகிறோம்.
பார்வையற்ற பட்டதாரிகள் படிப்பதற்கு எப்படியெல்லாம் உழைக்கிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். கண்ணில் நீரை வரவைக்கும் உழைப்பு அது. உதாரணமாக, பார்வையற்ற ஒருவர் வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்றுவர குறைந்தது ஐந்து பேரின் உதவிகள் தேவைப்படும். இதுபோல படிக்க, வாசித்துக் காட்ட, ஒப்படைவு (Assignment) எழுத, தேர்வு எழுத என்று பல படிநிலைகளுக்கும் மற்றவர்களின் உதவியைப் பெற வேண்டியுள்ளது.
இப்படி ஆயிரக்கணக்கான நல்ல உள்ளங்களின் உதவியால்தான் ஒரு பார்வையற்றவரால் பட்டம் பெற முடிகிறது. ஆகவே, பார்வையற்றவர்களின் சவாலான வாழ்க்கையின் ஒரு அங்கமே பட்டம். இந்திய மக்கள் அனைவருக்கும் அரசியல் சாசனம் வழங்கிய வேலைவாய்ப்பு உரிமை தங்களுக்கும் வேண்டும் என்றுதான் பார்வையற்ற பட்டதாரிகள் போராடுகிறார்கள்.
வேலைவாய்ப்பு உரிமை
‘வேலை கொடு! எங்களுக்கு வேலை கொடு!’ என்பதுதான் பார்வையற்ற பட்டதாரிகளின் தொடர் கோரிக்கையாக உள்ளது. இது அவர்களின்மீது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் ஆகியோரின் பரிதாபத்தால் வேலையைப் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்த முழக்கம் இல்லை. இது அவர்களின் உரிமை முழக்கம். வறுமை, படித்த படிப்பிற்குத் தகுந்த வேலையின்மை, குடும்பப் பொறுப்பு இவைதாம் அவர்களை வேலைவாய்ப்பு உரிமைக்காகப் போராடத் தூண்டுகிறது.
கடந்த 1981-ஆம் ஆண்டு தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி ஆணை வெளியிட்டது (G.O. No. 602 swnmp). அரசுத் துறைகள், அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் இந்த ஆணை செல்லும். ஆனால், இன்று வரை இவ்வாணை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இதனை முழுமையாக அமல்படுத்தக்கோரி பார்வையற்றோர் போராட்டங்களை நடத்துகின்றனர். இதுபோல, 1988-ஆம் ஆண்டு விளக்க ஆணை (G.O. No. 99 Swnmp) வெளியிடப்பட்டது. அந்த ஆணையும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
‘மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பு, சம உரிமை, முழு பங்கேற்புச் சட்டம் 1995’, 1996-ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதில், பிரிவு 33 அனைத்து அரசு அமைப்புகளிலும் மூன்று சதவிகித இட ஒதுக்கீட்டினைக் கட்டாயப்படுத்துகிறது. ஆனால், அதுவும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. வேதனையிலும் வேதனை என்னவென்றால், இந்தச் சட்டத்திற்கான தமிழக அரசின் விதிகள் 2002-இல்தான் உருவாக்கப்பட்டன. அதனால், ஆறாண்டுகாலம் எந்தவொரு பயனும் இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றப்பட்டனர்.
மேலும், ‘மாற்றுத்திறனாளிகளுக்கான பன்னாட்டு உரிமைப் பிரகடனம் 2007 (UNCRPD)’ அமலில் இருந்தபோதிலும் எந்த பலனையும் அது தரவில்லை. தமிழக அரசிடம் மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனியாக வேலைவாய்ப்பு விதி, கல்வி விதி, சமூகப் பாதுகாப்பு விதி என்று எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் பார்வையற்றவர்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
எல்லாவற்றிலும் பெருத்த ஏமாற்றமாக, ‘மாற்றுத்திறனாளிகள் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் 2016’ தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது; ஆனால், விதிகள் அமல்படுத்தப்படவில்லை. இது போன்று, பார்வையற்ற பட்டதாரிகள் அரசால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதால் வீதியில் இறங்கிப் போராடவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
பார்வையற்ற பட்டதாரிகள் அரசாங்கத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET), மாநிலத் தகுதித் தேர்வு (SLET), தேசியத் தகுதித் தேர்வு (NET) உள்ளிட்ட அனைத்து தகுதித் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றும் வேலை கிடைக்கவில்லை. இதற்கு, அரசிடம் வேலைவாய்ப்பு விதியின்மைதான் காரணம். இப்படி அரசும், அரசாங்க அதிகாரிகளும் திட்டமிட்டு வேலைவாய்ப்பு உரிமையைப் பறிக்கும்போது, போராடுவதைத் தவிர பார்வையற்ற பட்டதாரிகளுக்கு வேறு வழி இல்லை.
நீதிமன்ற ஆணைகள்
பார்வையற்றவர்களின் வேலைவாய்ப்பு கோரிக்கையை உச்சநீதிமன்றத்தில் வழக்காகத் தொடர்ந்து சில அமைப்புகள் நடத்தின. அவற்றுள், NFB தொடர்ந்த வழக்கில், 8.10.2013 நாளிட்ட ஆணை பார்வையற்ற பட்டதாரிகளுக்கு ஒரு மைல் கல். ஆங்கிலத்திலிருந்து ஆணையை மொழிபெயர்க்கும்போது அதன் பொருள் மாறக்கூடும் என்பதால் ஆணையை ஆங்கிலத்திலேயே தருகிறேன்.
“49. Employment is a key factor in the empowerment and inclusion of people with disabilities. It is an alarming reality that the disabled people are out of job not because their disability comes in the way of their functioning rather it is social and practical barriers that prevent them from joining the workforce. As a result, many disabled people live in poverty and in deplorable conditions. They are denied the right to make a useful contribution to their own lives and to the lives of their families and community”.
மாற்றுத்திறனாளிகள் தன்னிறைவு பெறுவதற்கும், சமூகத்தோடு ஒருங்கிணைவதற்கும் வேலைவாய்ப்பு மிக அவசியமானது. மேலும், பத்தி 50-இல் மத்திய, மாநில அரசுகள் சட்டங்களையும் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களையும் சரியாக அமல் செய்யாததால் மாற்றுத்திறனாளிகள் இன்றுவரை வறுமையில் வாடுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த பத்தியில், மாற்றுத்திறனாளிகளுக்குப் பதவிகளை கணக்கிடும்போது தொகுதி A, B, C, D அடிப்படையில் கணக்கிட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளனர். அதாவது தொகுதி A-யைக் கணக்கிடும்போது 100-க்கு 3 என கணக்கிட வேண்டும். தற்போது 100 பதவிக்கு 4 என்று கணக்கிட வேண்டும். அடுத்த செயல் பகுதி பின்வருமாறு:
“54. In our opinion, in order to ensure proper implementation of the reservation policy for the disabled and to protect their rights, it is necessary to issue the following directions:
i. We hereby direct the appellant herein to issue an appropriate order modifying the OM dated 29.12.2005 and the subsequent OMs consistent with this Court’s Order within three months from the date of passing of this judgment.
ii. We hereby direct the “appropriate Government” to compute the number of vacancies available in all the “establishments” and further identify the posts for disabled persons within a period of three months from today and implement the same without default.
iii. The appellant herein shall issue instructions to all the departments/public sector undertakings/Government companies declaring that the non-observance of the scheme of reservation for persons with disabilities should be considered as an act of non-obedience and Nodal Officer in department/public sector undertakings/Government companies, responsible for the proper strict implementation of reservation for persons with disabilities, be departmentally proceeded against for the default”.
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வெளியிடப்பட்ட அரசாணை 10-இல், உச்சநீதிமன்ற ஆணை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற ஆணை ஆகியவற்றைச் செயல்படுத்த ஆணை வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் ஆணையைச் செயல்படுத்த ஓர் ஆணையையும், சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையைச் செயல்படுத்த ஓர் ஆணையையும் தனித்தனியாக அரசு வெளியிட்டிருக்க வேண்டும். அவ்வாறு வெளியிடாமல் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டது.
நீதிமன்ற ஆணைகளை நீர்த்துப்போகச் செய்தது மட்டுமல்லாமல், இன்று வரை அந்த ஆணையால் பல்கலைக்கழகங்களில் ஒரு பார்வையற்றவருக்குக்கூட வேலை கிடைக்கவில்லை. மேலும், சென்னை உயர்நீதிமன்ற ஆணைகளைத் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, ஆணையின் செயல்பாட்டை தடுத்து, ஏராளமான பணி வாய்ப்புகளைத் தடுத்திருக்கிறது. இதற்குக் காரணம், தமிழகத்தில் நீதிமன்றங்களின் நடவடிக்கைகளைக் கவனித்துச் சரியான நேரத்தில் வழக்குத் தொடரவும், அரசு நீதிமன்ற ஆணைகளைச் செயல்படுத்தத் தவறும்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் பார்வையற்றவருக்கு தனியாக அமைப்போ, சங்கமோ இல்லை. அதனால்தான், அரசாணை எண் 5, 2013 செயல்படாமல் வெற்று ஆணையாக உள்ளது. அது செயல் வடிவம் பெற்றால், சுமார் 3500 பார்வையற்றவர்கள் பணி வாய்ப்பு பெறுவர். இதுபோல பல நீதிப்பேராணைகள் செயல் வடிவம் பெறாமல் உள்ளன.
அரசின் அலட்சியப் போக்கு
மாற்றுத்திறனாளிகள் என்றால் பரிதாபப்பட்டு ஏதேனும் உதவிகள் செய்தால் போதும் என்ற மனநிலையில் அரசும், அதிகாரிகளும், அமைச்சர்களும் இருக்கின்றனர். அதனால்தான், மாற்றுத்திறனாளிகளுக்கு என்று இருக்கும் நலத்துறைக்கு தனி அமைச்சரை நியமிப்பதில்லை. சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டம், மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் நலன், ஆதரவற்றோர் இல்லங்கள் போன்ற பல துறைகளை நிர்வகிக்கும் அமைச்சரிடம் மாற்றுத்திறனாளிகள் நலன் என்ற துறையை வழங்கினால் எப்படிச் சரியாகக் கவனிக்க முடியும்? அதனால்தான், மாற்றுத்திறனாளிகளுக்கு எண்ணிலடங்காக் குறைகள் உள்ளன. எனவே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்குத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு கோரிக்கைக்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
பார்வையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டங்கள் நடத்தினால், அமைச்சர் அளவில் பேச்சுவார்த்தை நடத்துவது போல நடத்தி, ‘உங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்’ என்று வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே அமைச்சர்களின் வாடிக்கையாகிவிட்டது. அதனை மீறி தொடர் போராட்டம் நடத்தினால் அரசாணை 260, அரசாணை 21 போன்ற செயல்படுத்த முடியாத ஆணைகளை வெளியிடுவதே அரசின் வழக்கமாகி்விட்டது.
அரசாணை 260, 21
‘தற்போது உள்ள காலிப் பணியிடங்கள், இனிமேல் ஏற்படும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்’ என்று அரசாணை 260 கூறுகிறது. தற்போது எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன என்பது சொல்லப்படவில்லை. இனிமேல் ஏற்படும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றால் அரசாணை 602 என்ன ஆயிற்று?
அடுத்து அரசாணை 21. இதன் மூலம் நாம் அரசுப் பணி பெறலாம் என்று நினைத்தால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஒப்பந்தப் பணியினை வழங்க ஆணையிடப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
இதுபோல, கண் துடைப்பு ஆணைகளை வெளியிடுவதே அரசின் வாடிக்கையாகிவிட்டது. பார்வையற்ற பட்டதாரிகள் மூன்று ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தால் அரசு வேலைவாய்ப்பை வழங்கும் ஆணை ஒன்றும் வழங்கப்படவில்லை. மாறாக ஏமாற்றமும், மன உளைச்சலும்தான் ஏற்பட்டுள்ளது.
உரிமையை மீட்டெடுக்கச் சில வழிகள்
நமக்குக் கிடைத்துள்ள உரிமைகள் அனைத்தும் தானாகக் கிடைத்தவை அல்ல. மாறாக, நம் முன்னோர்கள் செய்த போராட்டத்தின் மூலம் அரசால் வழங்கப்பட்டவை என்பதை நாம் உணர்ந்து, வலுவான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு போராட்டங்கள் மேற்கொள்ளும்போது, ஒட்டுமொத்த பார்வையற்ற பட்டதாரிகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
அரசாங்கம் செய்யும் ஏமாற்று வேலையைக் கண்காணித்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து நீதி ஆணைகளைப் பெறவும், அரசு நீதிமன்ற ஆணைகளைச் செயல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து தொடர்புடைய அதிகாரிக்கு தண்டனையைப் பெற்றுத் தரவும் ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும்.
--
கட்டுரையாளர் கரூர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ் துறை கௌரவ விரிவுரையாளர்.
தொடர்புக்கு: [email protected]